(1602)
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே.
பதவுரை
|
கஞ்சனை |
– |
கம்ஸனை |
|
காய்ந்தானை |
– |
சீறித் தொலைத்தவனும் |
|
கண்ண மங்கையுள் நின்றானை |
– |
திருக்கணணமங்கையில் நிற்பவனும் |
|
வஞ்சனம் |
– |
வஞ்சனையையுடையளான |
|
பேய் |
– |
பேய்ச்சியினுடைய |
|
முலையூடு |
– |
முலைவழியே |
|
வாய் மடுத்து |
– |
வாய் வைத்து |
|
உயிர் |
– |
(அவளது) பிராணனை |
|
உண்டானை |
– |
அபஹரித்தவனும், |
|
செம் சொல் நால் மறையோர் |
– |
அழகிய சொற்கள் நிறைந்த நான்குவேதங்களையும் வல்ல வைதிகர்கள் வாழ்கிற |
|
தென் அழுந்தையில் மன்னி நின்ற -; |
||
|
அஞ்சனம் குன்றம் தன்னை |
– |
மைமலைபோன்ற வடிவழகையுடையவனுமான பெருமானை |
|
அடியேன் கண்டுகொண்டேன்- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வார் திருவழுந்தூ ரெம்பெருமான் திறத்தில் மிக்க ஈடுபாடு கொண்டிருப்பதைக் கண்ட திருகண்ணமங்கை யெம்பெருமான் ‘இவ்வாழ்வார் நம்மை மறந்தொழிவரோ என்னவோ’ என்று திடுக்கிட்டுச் சடக்கென ஓடிவந்து எதிரேநிற்க, கண்ணமங்கையுள் நின்றானை’ என்கிறார்.
English Translation
The Lord who killed Kamsa, the Lord who lives in Kannamangai, the Lord who sucked the poison breast of the beautiful ogress Putana and took her life, is a black-gem mountain residing with Vedic seers, in beautiful Alundur, I have seen him to day.
