(1606)

(1606)

பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்

வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,

ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.

 

பதவுரை

பேரானை

–

திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும

குடந்தை பெருமானை

–

திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்

இலங்கு ஒளி சேர்

–

விளங்குகின்ற காந்தியோடு கூடின

வார் ஆர்

–

கச்சுநிறைந்த

வனம் முலையாள்

–

அழகிய முலைகளையுடைளான

மலர்மங்கை

–

பெரிய பிராட்டியார்க்கு

நாயகனை

–

வல்லபனும்

ஆரா இன் அமுதை

–

எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்

தென் அழுந்தையில் மன்னி நின்ற-

கார் ஆர் கரு முகிலை

–

மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை

கண்டுகொண்டு களித்தேன்-.

 

English Translation

The Lord of Tirupper, the Lord of kudandai, the Lord of lotus-dame Lakshmi, the insatiable ambrosia, is the dark-as-the-rain-cloud benevolent Lord.  He resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top