(1606)
பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.
பதவுரை
|
பேரானை |
– |
திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும |
|
குடந்தை பெருமானை |
– |
திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும் |
|
இலங்கு ஒளி சேர் |
– |
விளங்குகின்ற காந்தியோடு கூடின |
|
வார் ஆர் |
– |
கச்சுநிறைந்த |
|
வனம் முலையாள் |
– |
அழகிய முலைகளையுடைளான |
|
மலர்மங்கை |
– |
பெரிய பிராட்டியார்க்கு |
|
நாயகனை |
– |
வல்லபனும் |
|
ஆரா இன் அமுதை |
– |
எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும் |
|
தென் அழுந்தையில் மன்னி நின்ற- |
||
|
கார் ஆர் கரு முகிலை |
– |
மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை |
|
கண்டுகொண்டு களித்தேன்-. |
||
English Translation
The Lord of Tirupper, the Lord of kudandai, the Lord of lotus-dame Lakshmi, the insatiable ambrosia, is the dark-as-the-rain-cloud benevolent Lord. He resides in beautiful Alundur, I have seen him today.
