(1607)

(1607)

திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற

அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்

கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,

முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.

 

பதவுரை

திறல் முருகன் அனையார்

–

வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த

தென் அழுந்தையில், மன்னி நின்ற-;

அறம் முதல்வனவனை

–

ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,

அணி ஆலியர் கோன்

–

அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்

மருவார்

–

பகைவருடைய

கறை

–

ரக்தக்கறையையுடைத்தான

நெடுவேல்

–

நீண்டவேற்படையை

வலவன்

–

ஆளவல்லவரான

கலிகன்றி

–

ஆழ்வார்

சொல்

–

அருளிச்செய்ய

ஐ இரண்டும்

–

இப்பத்துப்பாசுரங்களையும்

முறை வழுவாமை

–

முறைதப்பாமல்

வல்லார்

–

ஓதவல்லவர்கள்

வான் உலகு

–

பாரமபதத்தை

முழுது

–

பூர்ணமாக

ஆள்வர்

–

ஆளப்பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கறை நெடுவேல் – பகைவர்களைக் கொன்று ஏறின ரத்தக்கறையோடு கூடின வேற்படை.  “தானுகந்த வூரெல்லாம் தன்தாள்பாடி” என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்கா யிருக்குமிவர்க்கு வேற்படையில் ரத்தக்கறை  கழுவுவதற்கு அவகாசமில்லையாம்.

 

English Translation

This garland of songs by stained-spear-wielding Tiruvali King Kalikanri is on the first-cause Lord residing in Southern Alundur armid Subrahmanya like beautiful people.  Those who master it will rule the whole sky-world.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top