(1592)
பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.
பதவுரை
|
துகிலின் கொடியும் |
– |
துணிகளோடு கூடின துவஜங்களும் |
|
தேர் துகளும் |
– |
தேர் நடத்தும் போது உண்டாகும் தூள்களும் |
|
துன்னி |
– |
நெருங்கி |
|
மாதர் |
– |
ஸ்திரீகளுடைய |
|
கூந்தல் |
– |
கூந்தலிலே (ஊட்டப்பட்ட) |
|
அகிலின் புகையால் |
– |
அகிற்புகையுமாகிய இவற்றால் |
|
முகில் ஏய்க்கும் |
– |
வர்ஷகாலத்தை ஒத்திருக்கின்ற |
|
அணி ஆர் வீதி |
– |
அழகிய திருவீதிகளை யுடைத்தான |
|
அழுந்தூர்-; |
||
|
பகலும் இரவும் தானே ஆய் |
– |
பகற்போதுக்கும் இராப் போதுக்கம் நியாமகனாய் |
|
பாரும் விண்ணும் தானே ஆய் |
– |
லீலா விபூதிக்கும் நித்ய வீபூதிக்கும் நியாமகனாய் |
|
நிகர் இல் சுடர் ஆய் |
– |
ஒப்பில்லாத தேஜஸ் பதார்த்தங்களுக்கும் ப்ரகாரியாய் |
|
இருள் ஆயி நின்றார் |
– |
இருளையும் ப்ரகாரமாக வுடையரான பெருமாள் |
|
நின்ற |
– |
நித்யவாஸம் பண்ணப்பெற்ற |
|
ஊர் போலும் |
– |
திவ்யதேசமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகலுமிரவுந் தானேயாய் = ????????? ????????? ??????? என்ற உபநிஷத்தின்படியே பகற்போதுக்கு இறைவனான ஸூர்யணும் இராப்போதுக்கு இறைவனான சந்திரனும் தனது கட்டளைக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படியான நிர்வாஹ சக்தி வாய்ந்தவன் திருமால் என்றபடி. தன் ஸங்கல்பத்தாலே பகலை இராவக்கவும் இரவைப் பகலாக்கவும் வல்லவன் என்றுமாம்; பாரதப்போரில் ஜயத்ரதவத வ்ருத்தாந்தத்தை நினைப்பது.
பாரும் விண்ணும் தானேயாய் = உபயவிபூதிக்கும் நிர்வாஹகனென்கை. நிகரில் சுடராய் இருளாகி நின்றார் = நக்ஷத்ரம் முதலிய சுடர்ப் பொருள்களையம் அவற்றுக்கு எதிர்த்தட்டான இருட்டையும் வடிவாகவுடையவன். ஸாத்விகர்களாய் ஜாயமாநகால கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரகாசமாக ஸேவைஸாதிப்பவன்; ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் தோன்றாதே இருள்மூடிக் கிடப்பவன் என்றவாறு. ஆகவிப்படி ஜகத்ரூபியா யிருந்தாலும் அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹவிசிஷ்டனாய் ஸேவை ஸாதிக்குமிடம் திருவழுந்தூர்.
(துகிலின் கொடியும் இத்தியாதி.) அவ்வூரில் எப்போதும் கார்காலமாகவேயிருக்குமென்கிறது. காற்றும் தூள்களும் மேகப்படலங்களும் விசேஷமாகக் கார்காலத்தில் காணப்படும்; அவை இங்குமுண்டு; அங்குள்ள மாளிகைகளெல்லாம் செல்வம் மிக்கனவாதலால் ஒவ்வொன்றிலும் கொடி கட்டியிருக்கும்; அவற்றின் முனையிற் கட்டப்படுள்ள துணிகளின் அலைச்சலினால் உண்டாகும் காற்று; செல்வத் திருவீதிகளில் தேர்கள் ஸஞ்சரிப்பதனால் கிளப்பப்படும் தூள்; மாதர்கள் தங்கள் கூந்தலுக்குப் பரிமள மூட்டுதற்க்காகச் செய்து கொள்ளும் அகிற்புகை (மேகத்திரள் போன்றது) ஆக இவற்றால் நித்தியமும் வர்ஷாகாலமாகவே தோற்றியிருக்கும்.
English Translation
He with himself. He resides in alundur where the pennors on mansions tops, the dust risen from the chariot festival and the Agliwood smoke that the dames perfume their coiffure with, all liken the raincloud in a storm.bears the day and night within himself, he bears the Earth and sky within himself, he bears the light of the orbs and darkness
