(1595)
வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
பதவுரை
|
பஞ்சி அன்ன மெல் அடி |
– |
பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய |
|
நல் பாவைமார்கள் |
– |
நல்ல ஸ்திரீகளினுடைய |
|
ஆடகத்தின் அம் சிலம்பின் |
– |
பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான |
|
ஆர்ப்பு |
– |
ஆரவாரமானது |
|
ஓவா |
– |
இடைவிடாதிருக்கிற |
|
அணி ஆர் வீதி அழுந்தூர்- |
||
|
வஞ்சி |
– |
வஞ்சிக்கொடிபோன்ற |
|
மருங்குல் இடை |
– |
இடுப்பானது |
|
நோவ |
– |
நோகும்படியாக |
|
மணந்து நின்ற |
– |
ஸம்ச்சேஷித்து நின்ற |
|
கனவகத்து |
– |
கனவிலே |
|
என் நெஞ்சு நிறையா |
– |
எனது நெஞ்சு நிறையுமாறு |
|
கை கூப்பி |
– |
நான அஞ்ஜலி செய்யப்பெற்று |
|
நின்றார் |
– |
நின்று கொண்டிருந்தவர் |
|
நின்ற |
– |
நித்யவாஸம் பண்ணுகிற |
|
ஊர் போலும் |
– |
திவ்யதேசமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதுவும் ஆழ்வார் நாயகி ஸமாதியால் பேசும் பாசுரம். கனவிலே வந்து கலந்து பிரிந்து போனவர் மற்றுள்ள அன்பரோடும் 1. நனவிலே கலவிசெய்ய வந்து நிற்கிறவிடம் திருவழுந்தூர்.
வஞ்சிமருங்குலிடைநோவ = பெண்டிருடைய இடைக்கு வஞ்சிக்கொடியை உவமை சொல்வது கவிமரபு. இடை நோவ மணந்து நின்றானென்றதனால் பூர்ணஸம்ச்லேஷம் நடந்தமை தோன்றும். ‘மருங்குல்’ என்றாலும் ‘இடை’ என்றாலும் இடுப்புக்கே பெயர்; இரண்டு சொற்களையும் சேரப் பிரயோகித்தது தமிழ் வழக்கு. கைகூப்பி – எச்சத்திரிபு.
அங்குள்ள மாதர்கள் பொன்மயமான நூபுரங்களைக் காலிலணிந்து கொண்டு நர்த்தனம் பண்ணா நிற்பர்கள்; அதனாலுண்டான ஆரவாரம் ஓயாதிருக்கு மென்கிறது பின்னடிகளில்.
பஞ்சி – பஞ்சு! போலி. பாவைமார் – பதுமைபோல அழகியவர்கள்; உவமையாகுபெயர். ‘ஹாடகம்’ என்னும் வடசொல் ஆடகமெனத் திரிந்தது.
1. நனவு – கனவுக்கு எதிர்த்தட்டு; ப்ரத்யக்ஷம்.
English Translation
Cotton-soft-tender-feet-damsel’s dancing bells never cease ringing in Alundur, laid out with beautiful streets, It is the residence of the Lord who blended with me in my dream-state making my creeper-slender waist with in pain, and I stood with folded hands, fully satisfied.
