(1595)

(1595)

வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.

 

பதவுரை

பஞ்சி அன்ன மெல் அடி

–

பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய

நல் பாவைமார்கள்

–

நல்ல ஸ்திரீகளினுடைய

ஆடகத்தின் அம் சிலம்பின்

–

பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான

ஆர்ப்பு

–

ஆரவாரமானது

ஓவா

–

இடைவிடாதிருக்கிற

அணி ஆர் வீதி அழுந்தூர்-

வஞ்சி

–

வஞ்சிக்கொடிபோன்ற

மருங்குல் இடை

–

இடுப்பானது

நோவ

–

நோகும்படியாக

மணந்து நின்ற

–

ஸம்ச்சேஷித்து நின்ற

கனவகத்து

–

கனவிலே

என் நெஞ்சு நிறையா

–

எனது நெஞ்சு நிறையுமாறு

கை கூப்பி

–

நான அஞ்ஜலி செய்யப்பெற்று

நின்றார்

–

நின்று கொண்டிருந்தவர்

நின்ற

–

நித்யவாஸம் பண்ணுகிற

ஊர் போலும்

–

திவ்யதேசமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவும் ஆழ்வார் நாயகி ஸமாதியால் பேசும் பாசுரம்.  கனவிலே வந்து கலந்து பிரிந்து போனவர் மற்றுள்ள அன்பரோடும் 1. நனவிலே கலவிசெய்ய வந்து நிற்கிறவிடம் திருவழுந்தூர்.

வஞ்சிமருங்குலிடைநோவ = பெண்டிருடைய இடைக்கு வஞ்சிக்கொடியை உவமை சொல்வது கவிமரபு.  இடை நோவ மணந்து நின்றானென்றதனால் பூர்ணஸம்ச்லேஷம் நடந்தமை தோன்றும்.  ‘மருங்குல்’ என்றாலும் ‘இடை’ என்றாலும் இடுப்புக்கே பெயர்; இரண்டு சொற்களையும் சேரப் பிரயோகித்தது தமிழ் வழக்கு. கைகூப்பி – எச்சத்திரிபு.

அங்குள்ள மாதர்கள் பொன்மயமான நூபுரங்களைக் காலிலணிந்து கொண்டு நர்த்தனம் பண்ணா நிற்பர்கள்; அதனாலுண்டான ஆரவாரம் ஓயாதிருக்கு மென்கிறது பின்னடிகளில்.

பஞ்சி – பஞ்சு! போலி.  பாவைமார் – பதுமைபோல அழகியவர்கள்; உவமையாகுபெயர்.  ‘ஹாடகம்’ என்னும் வடசொல் ஆடகமெனத் திரிந்தது.

1. நனவு – கனவுக்கு எதிர்த்தட்டு; ப்ரத்யக்ஷம்.

 

English Translation

Cotton-soft-tender-feet-damsel’s dancing bells never cease ringing in Alundur, laid out with beautiful streets, It is the residence of the Lord who blended with me in my dream-state making my creeper-slender waist with in pain, and I stood with folded hands, fully satisfied.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top