(1559)
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
பதவுரை
| ஓடா |
– |
நாட்டில் எங்கும் நடையாடாத |
| ஆள் அரியின் உரு ஆய் |
– |
நரஸிம்ஹரூபியாய் |
| என்றன் மாடே வந்து மருவி |
– |
என் பக்கல்வந்து பொருந்தி |
| அடியேன் |
– |
அடியேனுடைய |
| மனம் |
– |
மனத்தை |
| கொள்ள வல்ல மைந்தா |
– |
கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே! |
| ஓ நறையூர் நின்ற நம்பீ!- ; | ||
| பனுவல் கவிதை கொண்டு |
– |
இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு |
| தொண்டர் தம்மை |
– |
நீசர்களை |
| பாடேன் |
– |
பாடுவது தவிர்ந்தேன்; |
| உன்னை அல்லால் |
– |
உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட) |
| நாடேன் |
– |
முயலமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஹம்ஸாவதாரத்திலும் வராஹாவதாரத்திலும் தமது நெஞ்சு ஈடுபட்டு உருகினபடியைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்; நரஸிம்ஹாவதாரத்தில் ஈடுபாட்டை இப்பாட்டில் அருளிச்செய்கிறார். உலகத்தில் எங்கும் கண்டறியாத புதியதொரு பிறவி பிறப்பதே! ; மநுஷ்யனாகவாவது சிங்கமாகவாவது அவதரித்தாலாகாதோ? நரங்கலந்த சிங்கமென்று புதிதாகவொரு பிறவியைக் கற்பித்துக்கொண்டு அதிலே பிறந்த நீர்மை என்கொல்! என்று தமது திருவுள்ளம் ஆழ்ந்தமையை முன்னடிகளி லருளிச்செய்கிறார்.
“தாழ்ந்த ஜந்மத்திலே வேணுமாகில் பிறக்கிறாய்; நாட்டார் பிறக்கும் பிறவிகளைப் பிறக்கலாகாதோ?” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.
அடியேன் மனங்கொள்ளவல்ல மைந்தா! = பண்டு நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றினவன்று ப்ரஹ்லாதாழ்வானுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயென்பது உனக்கு ஒருமிடுக்கு அல்ல; கல்நெஞ்சனான என்னுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுவே உனக்குப் பெருமிடுக்குக் காண் ! என்பது உள்ளுறை.
இப்படிப்பட்ட அற்புத சக்திவாய்ந்த உன்னையல்லது மற்றொருவரையும் என் நாவினாற் பாட முயலவும் மாட்டேனென்கிறார். பின்னடிகளில். ‘தொண்டர்’ என்றது கூழாட்பட்டு நிற்பவர்களை. “கவிதைப்பனுவல்” என்றதை “பனுவல் கவிதை” எனமாற்றி அந்வயித்துக்கொள்க. சாஸ்த்ரோக்தமான லக்ஷணங்களில் குறையற்ற கவித்துவமென்றபடி.
English Translation
Taking a form of wonder-lion you came dearly into me! Through your love for me you made me your slave, O my Prince! No more can I sing in Praise of mortal beings with my songs! Nor do I seek any other god. Naraiyur Lord-m-residence, O!
