(1559)

(1559)

ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்

மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,

பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,

நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.

பதவுரை

ஓடா

–

நாட்டில் எங்கும் நடையாடாத
ஆள் அரியின் உரு ஆய்

–

நரஸிம்ஹரூபியாய்
என்றன் மாடே வந்து மருவி

–

என் பக்கல்வந்து பொருந்தி
அடியேன்

–

அடியேனுடைய
மனம்

–

மனத்தை
கொள்ள வல்ல மைந்தா

–

கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே!
ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;
பனுவல் கவிதை கொண்டு

–

இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு
தொண்டர் தம்மை

–

நீசர்களை
பாடேன்

–

பாடுவது தவிர்ந்தேன்;
உன்னை அல்லால்

–

உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட)
நாடேன்

–

முயலமாட்டேன்.

 

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஹம்ஸாவதாரத்திலும் வராஹாவதாரத்திலும் தமது நெஞ்சு ஈடுபட்டு உருகினபடியைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்; நரஸிம்ஹாவதாரத்தில் ஈடுபாட்டை இப்பாட்டில் அருளிச்செய்கிறார்.  உலகத்தில் எங்கும் கண்டறியாத புதியதொரு பிறவி பிறப்பதே! ; மநுஷ்யனாகவாவது சிங்கமாகவாவது அவதரித்தாலாகாதோ? நரங்கலந்த சிங்கமென்று புதிதாகவொரு பிறவியைக் கற்பித்துக்கொண்டு அதிலே பிறந்த நீர்மை என்கொல்! என்று தமது திருவுள்ளம் ஆழ்ந்தமையை முன்னடிகளி லருளிச்செய்கிறார்.

“தாழ்ந்த ஜந்மத்திலே வேணுமாகில் பிறக்கிறாய்; நாட்டார் பிறக்கும் பிறவிகளைப் பிறக்கலாகாதோ?” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

அடியேன் மனங்கொள்ளவல்ல மைந்தா! = பண்டு நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றினவன்று ப்ரஹ்லாதாழ்வானுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயென்பது உனக்கு ஒருமிடுக்கு அல்ல; கல்நெஞ்சனான என்னுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுவே உனக்குப் பெருமிடுக்குக் காண் ! என்பது உள்ளுறை.

இப்படிப்பட்ட அற்புத சக்திவாய்ந்த உன்னையல்லது மற்றொருவரையும் என் நாவினாற் பாட முயலவும் மாட்டேனென்கிறார்.  பின்னடிகளில்.  ‘தொண்டர்’ என்றது கூழாட்பட்டு நிற்பவர்களை.  “கவிதைப்பனுவல்” என்றதை “பனுவல் கவிதை” எனமாற்றி அந்வயித்துக்கொள்க.  சாஸ்த்ரோக்தமான லக்ஷணங்களில் குறையற்ற கவித்துவமென்றபடி.

 

English Translation

Taking a form of wonder-lion you came dearly into me! Through your love for me you made me your slave, O my Prince! No more can I sing in Praise of mortal beings with my songs!  Nor do I seek any other god. Naraiyur Lord-m-residence, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top