(1555)

(1555)

அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.

பதவுரை

அத்தா

–

ஸ்வாமியே!
அரியே

–

(விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே!
என்று

–

என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி
உன்னை அழைக்க

–

நான் உன்னை அழைக்குமளவில்
பிறர்

–

அயலார்
என்னை

–

இப்படி அழைக்கிற என்னைநோக்கி
பித்தா என்று பேசுகின்றார்

–

‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்;
முத்தே

–

முத்துப்போன்றவனே!
மணி மாணிக்கமே

–

சிறந்த மாணிக்கம் போன்றவனே!
முளைக்கின்ற வித்தே

–

முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே!
உன்னை

–

இப்படிப்பட்டவுன்னை
நான்

–

அடியேன்
எங்ஙனம் விடுகேன்

–

எவ்விதமாக விட்டொழிவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன் பிராகிருத ஜனங்களைப்போலே ‘உண்டியே உடையே’ என்று கூப்பிடுமவனல்லேன்; எப்போதும் பகவத் விஷயத்தி லீடுபட்டு ‘அத்தா! அரியே’ என்றிப்படி பகவந் நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவதே எனக்குப் போது போக்காயிருக்கின்றது. திகம்பரஜநே க்ராமே ஹாஸ்ய : கெளபீந வாந் நர:”  (கோமணங்கட்டாத வூரில் கோமணங்கட்டுமவன் பைத்தியக்காரன்) என்னும் பழமொழிப்படியே *உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்கட்கு நான் பைத்தியக்காரனாகத் தோற்றுகின்றேன்; உன்னைநான் அத்தா! என்றழைத்தவாறே என்னை அவர்கள் பித்தா! என்றழைக்கின்றனர்; இப்படிப்பட்ட பிராகிருத ஜனங்களின் பரிஹாஸத்திற்கு அஞ்சி உன்னை விட்டு விடலாமென்று பார்த்தாலோ, மாட்டுகின்றிலேனே என் செய்வேனென்கிறார்.  “பேயரே யெனக்கியாவரும் யானமோர் பேயனே………….அரங்கா வென்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற பெருமாள் திருமொழி இங்கே நினைக்கத்தகும்.

அத்தா – அத்தன் என்பதன் விளி; ஸ்வாமிந்! என்றபடி. அரி – ஹரி.  முளைக்கின்ற வித்தே! ஜகத்காரண பூதனே! என்றவாறு.

 

English Translation

When I call you, “Lord and Master!”, othes call me “Mad, Mad!” O Pearls! O Emerald gem! O Growing seed!  How can I every let you go?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top