(1409)
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும்,பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.
பதவுரை
|
இந்திரன் பிரமன் ஈசன் என்ற இவர்கள் |
– |
இந்திரன் பிரமன் ருத்ரன் எனப்படுகிற இத்தேவர்கள் |
|
எண் இல் |
– |
கணக்கில்லாத |
|
பல் குணங்களே இயற்ற |
– |
பல திருக்குணங்களையும் சொல்லித்துதிக்கப் (பெற்றவனாய்), |
|
பல் உயிர்க்கு எல்லாம் |
– |
ஜீவராசிகளுக்கெல்லாம் |
|
தந்தையும் தாயும்; மக்களும் மிக்க சுற்றமும் |
– |
தகப்பனும் மாதாவும் பிள்ளைகளும் அளவறந்த ஜ்ஞாதிகளும் |
|
சற்றி நின்று அகலா பந்தமும் |
– |
சூழ்ந்து கொண்டிருந்து விட்டுப்பிரிய மாட்டாத பந்துவர்க்கமும் |
|
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் |
– |
ஸம்ஸாரபந்தத்தை அறுக்க வல்ல ஒரு மருந்தும் |
|
பான்மையும் |
– |
(ஸம்ஸாரபந்தமற்றபின் விளையக்கூடிய) நிர்மல ஸ்வபாவமும் |
|
அந்தமும் |
– |
விநாசமும் |
|
வாழ்வும் |
– |
வாழ்ச்சியும் |
|
ஆய |
– |
தானேயாயிருப்பவனான |
|
எம் பெருமான் |
– |
ஸ்வாமியானவன் |
|
அரங்கம் மா நகர் அமர்ந்தான் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “இந்திரன் பிரமனீகனென் றிவர்கள் எண்ணில் பல் குணங்களேயியற்ற அரங்கமா நகர் அமர்ந்தான்” என்று அந்வயிப்பது. இந்திரனென்றும் நான்முகனென்றும் பரமசிவனென்றும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர்கள் அஹங்கார மொழிந்தவர்களாய்ப் பல திருக்குணங்களையும் சொல்லித் துதித்துக்கொண்டு ஆச்ரயிக்கத் திருவரங்கத்திலே சயனித்தருளும் பெருமான் எப்படிப்பட்டவனென்னில்; பிராணிகளுக்கெல்லாம் ஹிதமே நடத்தக் கடவனான பிதாவும், ப்ரியத்தையே நடத்தக் கடவுளான தாயும், நரகத்தைக் கடத்தும் புத்திரர்களும், – அளவிறந்திருந்துள்ள ஜ்ஞாதிவர்க்கமும், பக்கம்விட்டு நீங்காத பந்துவர்க்கமுமாக எல்லா வுறவுமுறையாயிருப்பவன்; மாறிமாறிப் பலபிறப்பும் பிறப்பதாகிற இந்த ஸம்ஸார பந்தத்தை அறுக்கல்ல மருந்தாயிருப்பவன்; இந்த ஸம்ஸாரபந்தம் அற்றால் இருக்கக்கூடிய நிஷ்கள ஸ்வபாவமாயிருப்பவன்; ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவனாயிருப்பவன்.
English Translation
He is worhsipped by Indra, Brahma Siva and the other gods, He is mother father, childre, relatives, -that attachment over all these, and the medicine to rid these attachments! too. He is the end and the means, and the life. He is the resident of Arangama-Nagar.
