(1409)

(1409)

இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,

தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்

பந்தமும்,பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,

அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.

 

பதவுரை

இந்திரன் பிரமன் ஈசன் என்ற இவர்கள்

இந்திரன் பிரமன் ருத்ரன் எனப்படுகிற இத்தேவர்கள்

எண் இல்

கணக்கில்லாத

பல் குணங்களே இயற்ற

பல திருக்குணங்களையும் சொல்லித்துதிக்கப் (பெற்றவனாய்),

பல் உயிர்க்கு எல்லாம்

ஜீவராசிகளுக்கெல்லாம்

தந்தையும் தாயும்; மக்களும் மிக்க சுற்றமும்

தகப்பனும் மாதாவும் பிள்ளைகளும் அளவறந்த ஜ்ஞாதிகளும்

சற்றி நின்று அகலா பந்தமும்

சூழ்ந்து கொண்டிருந்து விட்டுப்பிரிய மாட்டாத பந்துவர்க்கமும்

பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்

ஸம்ஸாரபந்தத்தை அறுக்க வல்ல ஒரு மருந்தும்

பான்மையும்

(ஸம்ஸாரபந்தமற்றபின் விளையக்கூடிய) நிர்மல ஸ்வபாவமும்

அந்தமும்

விநாசமும்

வாழ்வும்

வாழ்ச்சியும்

ஆய

தானேயாயிருப்பவனான

எம் பெருமான்

ஸ்வாமியானவன்

அரங்கம் மா நகர் அமர்ந்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இந்திரன் பிரமனீகனென் றிவர்கள் எண்ணில் பல் குணங்களேயியற்ற அரங்கமா நகர் அமர்ந்தான்” என்று அந்வயிப்பது.  இந்திரனென்றும் நான்முகனென்றும் பரமசிவனென்றும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர்கள் அஹங்கார மொழிந்தவர்களாய்ப் பல திருக்குணங்களையும் சொல்லித் துதித்துக்கொண்டு ஆச்ரயிக்கத் திருவரங்கத்திலே சயனித்தருளும் பெருமான் எப்படிப்பட்டவனென்னில்; பிராணிகளுக்கெல்லாம் ஹிதமே நடத்தக் கடவனான பிதாவும், ப்ரியத்தையே நடத்தக் கடவுளான தாயும், நரகத்தைக் கடத்தும் புத்திரர்களும், – அளவிறந்திருந்துள்ள ஜ்ஞாதிவர்க்கமும், பக்கம்விட்டு நீங்காத பந்துவர்க்கமுமாக எல்லா வுறவுமுறையாயிருப்பவன்; மாறிமாறிப் பலபிறப்பும் பிறப்பதாகிற இந்த ஸம்ஸார பந்தத்தை அறுக்கல்ல மருந்தாயிருப்பவன்; இந்த ஸம்ஸாரபந்தம் அற்றால் இருக்கக்கூடிய நிஷ்கள ஸ்வபாவமாயிருப்பவன்; ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவனாயிருப்பவன்.

 

English Translation

He is worhsipped by Indra, Brahma Siva and the other gods, He is mother father, childre, relatives, -that attachment over all these, and the medicine to rid these attachments! too.  He is the end and the means, and the life.  He is the resident of Arangama-Nagar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top