(1413)

(1413)

ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள்,

ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய,

ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே,

ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே.

 

பதவுரை

ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய

ஆயிரம் மலைகள் நெருங்கச் சேர்ந்தாற்போலே                       இருக்கப் பெற்றவையும்

அடல் புரை

யுத்தத்திற்குத் தகுதியானவையும்

எழில் திகழ்

அழகு பொலிந்தவையும்

திரள் தோள் ஆயிரம்   திரண்டவையுமான

(கார்த்த வீர்யார்ஜுநனுடைய) தோள்களாயிரமும்

துணிய

அறும்படியாக

அடல் மழு பற்றி

தீக்ஷ்ணமான மழுப்படையைக் கையிற்கொண்டு

மற்றவன்

அந்தக்கார்த்த வீரியார்ஜுநனை

அகல் விசும்பு அணைய

விசாலமான வீரஸ்வர்க்கத்தை

யடையச் செய்து (அதன் பின்)

அமரர்

தேவர்கள்

சென்று

கிட்டி

ஆயிரம் பெயரால் இறைஞ்ச

ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லித் துதிக்க

ஆலை கடல நடுவே

அலையெறிகின்ற ஸமுத்ரமத்யத்தில்

சுடர்

ஒளிபொருந்திய

ஆயிரம் வாய்

ஸஹஸ்ரமுகங்களையுடைய

அரவு அணை

திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியிலே

அறிது துயில் துயின்றான்

யோகநித்திரை பண்ணும் பெருமான்

அரங்கம் மா நகர் அமர்ந்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அகல் விசும்பு அணைய = பெருமான் கையினால் போரில் உயிர்துறந்தவன் வீரஸ்வர்க்கம் சேரக்கடவனென்க.

தேவர்களையும் உட்பட நலிந்துகொண்டு கொழுந்துக்கிடந்த இவன் மாண்டுபோகவே; பின்பு தேவர்கள் மனமகிழ்ந்து திருப்பாற்கடலிற் சென்று பெருமானைத் துதிக்கக் கேட்க வேணுமோ? அது சொல்லுகிறது பின்னடிகளில். திருவாய்மொழியில் “ஐந்துபைந்தலையாட ரவணைமேவிப் பாற்கடல் யோகநித்திரை, சிந்தைசெய்த வெந்தாய்” என்கிறார் நம்மாழ்வார்;  இவர் “ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றான்” என்கிறார்; இவ்வெண்ணில் ஒரு நிர்ப்பந்தமில்லை; திருவனந்தாழ்வானுக்கு மகிழ்ச்சியின் மிகுதியினால் வாய்கள் பல்லாயிரமாகவும் பணைக்குமென்ப.

 

English Translation

The warrior king karttavirya Arjuna, with arms like a thousand peaks, fell to the sharp axe of the Lord Parasurama; his thousand arms were cut, and he went skyward.  The Lord then, praised by the celestials with the chant of a thousand names, went to his abode in Milk Ocean, to recline on his thosuand-hooded snake.  He is the resident of Arangama-Nagar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top