(1389)
கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே .
பதவுரை
|
அகல் அல்குல் கலை ஆளா |
– |
அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; |
|
கை கனம் வளையும் ஆளா |
– |
கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை; |
|
நான் என் செய்கேன் |
– |
(இதற்கு) நான் என்ன பண்ணுவேன்? |
|
அடியேன் |
– |
“அடியவளாகிய என்னை |
|
விலை ஆள் ஆ |
– |
பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள) |
|
வேண்டுதியோ |
– |
திருவுள்ளம் பற்றுவாயோ? |
|
வேண்டாயோ |
– |
மாட்டாயோ?” |
|
என்னும் |
– |
என்கிறாள்; |
|
மெய்யம் மலை ஆளன் |
– |
திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும் |
|
வானவர் தம் தலையாளன் |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும் |
|
ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன் |
– |
ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான் |
|
என் மகளை செய்தனகள் எங்ஙனம் |
||
|
நான் சிந்திக்கேன் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்திலே ஸாமாந்யனான ஒரு க்ஷுத்ரபுருஷனிடத்தில் காதல் கொண்ட மாதர் அவனுடைய விரஹத்தினால் மேனிமெலிந்து வருந்துவதாகக் காணும்போது ஸாக்ஷாத் புருஷோத்தமனிடத்தில் பெரும் பித்துக்கொண்ட பேரன்பர்க்கு அந்த எம்பெருமானுடைய விரஹத்தில் சரீரம் க்ரசமாயொழியக் கேட்கவேணுமோ? அப்படி சரீரம் மெலிந்தமை கூறுவது முதலடி. உடல் மெலிந்துபோகவே அரையில் வஸ்த்ரமும் கையில்வளைகளும் தங்கமாட்டாமல் கழன்றொழியும் ஆதலால் அதனைச்சொன்ன முகத்தால் மேனிமெலிவு சொல்லிற்றாயிற்று. ஒருபேச்சுப் பேசவும் சக்தியில்லாதபடி மேனி மெலிந்திருக்கச் செய்தேயும் இவளுடைய வாய்ப்பேச்சின் வீறு இருக்கும்படி காண்மின் – ‘விலையாளாவடியேனை வேண்டுதியோ வேண்டாயோ?’ என்கிறாள் எம்பெருமானை முன்னிலைப்படுத்தி. அதாவது –‘என்னை உனக்கே அற்றுத்தீர்த்த அடியவளாக ஆக்கிக்கொள்ள எண்ணமுண்டா இல்லையா? சொல்லிவிடு’ என்று துணிவாகக் கேட்கிறாள். ‘விலையாளா வடியேனை’ என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் கொள்ளலாம்;– ‘அடியேனை விலையாளா வேண்டுதியோ?’ என்று அந்வயித்து, “கேசவா புருடோத்தமா கிளர்சோதியாய் குறளாவென்று, பேசுவாரடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று சொல்லுகிறபடியே பிறர்க்கு விலைக்குவிற்கவுமாம்படி உரிமைப்படுவதே சேஷத்வ காஷ்ட்டையாகையால் அப்படிப்பட்ட அடியவர்க்கு ‘விலையாள்’ என்று பெயர் என்று கொண்டு அடியேனை விலையாளாக வைத்துக்கொள்ளத் திருவுள்ளமுண்டோ? இல்லையோ? என்று கேட்பதாகக் கொள்க. அன்றியே விலையாளா என்பதை நேரே அடியேனுக்கு விசேஷணமாக்கி, விலையாளாவடியேனை – பிறர்க்கு விலைக்கு ஆடபடமாட்டாதே அடியேனை – பிறர்க்கு இழிதொழில்செய்து கூலிபெற்று வயிறுவளர்க்கின்ற மற்றவர்களைப் போலல்லாத அடியேனை, வேண்டுதியோ வேண்டாயோ – திருவுள்ளமுவந்து பற்றுவாயோ மாட்டாயோ? என்கிறாள் என்பதாகவுங் கொள்ளலாம்.
இப்படி இவள் மேனிமெலிந்து போகவும் பெரியபெரிய பேச்சுக்கள் பேசவும் நேர்ந்தது அப்பெருமான் படுத்தினபாடு என்கிறது பின்னடிகளில்.
English Translation
She has lost her bangles and her golden belt, now what I shall do? “O Buyer, do you or don’t you want this slave?”, She openly says, Tirumeyyam, Lord of the celestials piercing seven trees in a row, Bow-wielder, how can I accept what he did to my daugher frail!
