(1393)
தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி ம துசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே.
பதவுரை
|
தாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் |
– |
‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; |
|
யாதாலும் ஒன்று உரைக்கில் |
– |
(அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக) |
|
எம்பெருமான் திரு அரங்கம் என்னும் |
– |
‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்; |
|
பூ மேல் மாது ஆளன் |
– |
பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும் |
|
குடம் ஆடி |
– |
குடக்கூத்தாடினவனும் |
|
மதுசூதன் |
– |
மதுவென்னமசுரனைக் கொன்றவனும் |
|
முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன் |
– |
முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி |
|
என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்? |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என் மகள் ஓச்சலொழிவின்றியே கலகலவென்று எதையேனும் பேசிக்கொண்டிருப்பாளே; அப்படிப்பட்ட இவளுடைய பேச்செல்லாம் ஓய்ந்துவிட்டது; 1. “அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே” என்றார்போலே அவ்வளவு வார்த்தையும் செல்லமாட்டாதாளாய் ‘வனமாலை தாரானோ?’ என்கிற இவ்வளவு வார்த்தையே சொல்லிக்கொண்டு தளர்கின்றாள். ‘நங்காய்! இப்படிப்பட்ட தளர்ச்சி உனக்குத் தகார்’ என்று ஹிதமாக நாம் ஏதாவது சொல்லத்தொடங்கினால் நம் வார்த்தை காதில் விழவொண்ணாதபடி காதை மூடிக்கொண்டு ‘திருவரங்கம், பெரிய கோயில்’ என்று கம்பீரமாக மிடற்றோசை செய்கின்றாள்.
English Translation
Waiting for his Tualsi garland with pollen she wilts away, see! Say something to her she only sights, and says, “My Lord in Arangam!” Spouse of the lotus-dame, Pandava’s harbinger dancer of pots, Madhusuda, -how can I accept what he did to my daughter frail!
