(1379)

(1379)

வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,

பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,

தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,

செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே!

 

பதவுரை

நல் தையலார் குழல் மாலையும்

நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும்

மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும்

இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு)

கலந்து இழி புனல் சூழ்

சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட

தென் அரங்கம்

திருவரங்கம்,

வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்

(பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும்,

மணி நீள் முடி

மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும்

பை கொள் நாகத்து அணையான்

படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான்

பயிலும் இடம் என்பர்

நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர்

 

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by swiftly flowing waters that carry the flowers from the coiffure and red Sandal from the breasts of beautiful dames, -in the abode of the wonder-Lord who swallowed the Universe and lay on a fig leaf, the Lord who wears a fall crown and reclines on a hooded serpent.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top