(1370)
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே!
பதவுரை
|
மையின் ஆர் தரு |
– |
கருநிறத்தினால் பூர்ணமான |
|
வரால் இனம் |
– |
வரால் மீன்களின் திரள் |
|
வண் தடத்திடை பாய |
– |
அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும், |
|
கமலங்கள் தெய்வம் நாறும் |
– |
தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற |
|
ஒண் பொய்கைகள் |
– |
அழகிய பொய்கைகளினால் |
|
சூழ் |
– |
சூழப்பட்டதுமான |
|
திருவெள்ளறை, நின்றானே!; |
||
|
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் |
– |
மிகவும் க்ரூரனாயிருந்து கொண்டு ஸப்த லோகங்களையும் ஒருங்கே ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இரணியனுடைய |
|
உடலகம் இரு பிளவு ஆ கையில் |
– |
மார்பு இரண்டு கூறாம்படி திருக்கைகளில் |
|
நீள் உகிர் படை அது வாய்த்தவனே |
– |
நீண்ட நகங்களையே ஆயுதமாகப் பெற்றவனே! |
|
எனக்கு அருள்புரி |
– |
அடியேன் மீது க்ருபை பண்ணவேணும் |
English Translation
O Lord residing in Tiruvellarai, where schools of dark Varal-fish swim in lakes, where lotus flowers spread a divine fragrance! Then in the yore you came with sharp claws and fore the entrails of the fryrant who persecuted the seven worlds. Pray grace me!
