(1371)

(1371)

வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த,

காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு,

மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த,

தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே!

 

பதவுரை

மாம்பொழில் தளிர் கோதிய மட குயில்

மாந்தோப்புகளிலே அவற்றின் தளிர்களை கொத்தி உண்ட அழகிய குயில்கள்

வாய் அது துவர்ப்பு எய்த

தமது வாய் துவர்த்துப்போக (அந்த ரஸத்தை மாற்றுகைக்காக)

தீம் பலங்கனி தேன் அது நுகர்

இனிமையான பலாப் பழங்களிலுள்ள மதுவைப் பானம் பண்ணப் பெற்ற

திருவெள்ளறையில் நின்றானே!;

வாம் பரி

(பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள்

உக மன்னர்தம் உயிர் செக

மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து

ஐவர்கட்கு அரசு அளித்த

பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும்,

காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப

மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே!

நின் காதலை எனக்கு அருள்

உன் விஷயமான பரம பக்தியை அடியேனுக்குப் பிறப்பித் தருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாம்பொழில் இத்யாதி.) மாஞ்சோலையிலே போய்ப்புகுந்து அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அத்துவர்ப்பை வேறு ரஸத்தாலே மாற்றவேண்டி இனிய பலாப்பழத்திலே சென்று வாய்வைக்கின்றதாம்.  காவ்ய நாடகாதிகளிலும் பாஹ்யாகமங்களிலும் வாய்வைத்துக் கசத்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவதநுபவம் செய்து களிக்கின்றமை கூறியவாறு.

 

English Translation

O Lord residing in Tiruvellarai, where cockoos peck on tender Mango leaves then rid the astringency by drinking the nectar of Jackfruit!  O Lord of venkatam with Bamboo groves! Then in the yore you killed horses and warrior-kings and gave the kingdom to the five Pandavas.  Pray grace me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top