(1361)

(1361)

கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்

ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,

சேற்றே ருழுவர் கோதைப் போதூண்,

கோல்தேன் முரலும் கூட லூரே!

 

பதவுரை

கூறு ஏர் உருவின்

கொண்டாடுவதற்குத் தகுந்த ரூபத்தையுடைய

குறள் ஆய்

வாமநமூர்த்தியாகி

நிலம் நீரேற்றான்

பூமிதானம் வாங்கிக்கொண்ட

எந்தை பெருமான் ஊர்

எம்பெருமானுடைய திவ்யதேசம்;-

சேறு

சேறுகளிலே

ஏர் உழவர்

ஏர்கட்டி உழுகின்றவர்களது

கோதை

மயிர்முடியிலே வைக்கப்பட்ட

போது

பூக்களிலுள்ள தேனை

ஊண்

உணவாகவுடைய

கோல் தேன்

சோலைவண்டுகள்

முரலும்

இசைபாடப்பெற்ற

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘இப்படியும் விலக்ஷணமானதொரு வாமநவேஷம் உலகிலுண்டோ’ என்று கண்டாரடங்கலுங் கொண்டாடத் தகுந்த வாமந மூர்த்தியாய் மாவலிபக்கலிற் சென்று பூமிதாநம் வாங்கின பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர்.

(சேற்றேழுவர் இத்யாதி.) அவ்விடத்து ஏர்பிடித்து உழுகின்றவர்களும் முடியிற் பூவணிந்திருப்பர்களென்று காட்டியவாறு.  க்ஷேத்ர வைபவங்களில் இதுவுமொன்றாம்.  “கோதைப்போதுண்” என்ற பாடத்தில், உண் – உண்கிற’ என்று பொருளாம்.  ‘போதூண்’ என்றபாடத்தில், ஊண் முதனிலை திரிந்து தொழிற்பெயர்.

கோல் தேன் – மரக்கொம்புகளிலே தட்டித்திரியும் வண்டுகள் என்கை.  இவை தமக்கு வாய்த்த இடங்களை விட்டிட்டு, சேற்றேருழுவர்களது தலைப்பூக்களிலே மதுவில் நசையாலே திரிகின்றனவாம்

 

English Translation

My Lord and Master came as a beautiful lad and took the Earth and oil.  He resides in Kudalur where bees take nectar from the coiffure of the dames filling the land.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top