(1441)
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
பதவுரை
|
பிறையின் ஒளி எயிறு இலகமுறுதி |
– |
பாலசந்திரன் போன்று ஒளிபெற்ற கோரைப் பற்கள் விளங்க மேலிட்டுவந்து |
|
எதிர் பொருதும் என வந்த அசுரர் |
– |
எதிரிட்டுச் சண்டைபோடுவோ மென்று வந்த அஸுரர்களுடைய |
|
இறைகள் அவை |
– |
சரீரங்களானவை |
|
நெறு நெறு என |
– |
நெறுநெறு வென்று முறிந்தொழிய |
|
வெறிய அவர் |
– |
வெறுங்கையரான அவ்வசுரர்கள் |
|
வயிறு அழல நின்ற |
– |
வயிறெரியும்படி (வெற்றி பெற்று) நின்ற |
|
பெருமான் |
– |
ஸர்வேச்வரன் (எழுந்தருளியிருக்கப்பெற்றதாய்,) |
|
சிறைகொள் மயில் குயில் பயில |
– |
(சிறந்த) சிறகுகளையுடைய மயில்களும் குயில்களும் நெருங்கிவாழப்பெற்றனவும் |
|
மலர்கள் உக |
– |
பூக்கள் (எங்கும்) சிந்தியிருக்கப்பெற்றனவும் |
|
அளி முரல |
– |
வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்றனவும் |
|
அடி கொள் நெடு மா நறை செய் |
– |
கீழேவேரூன்றி மேலே நீண்டுள்ள மா மரங்கள் மணம் வீசப்பெற்றனவுமான |
|
பொழில் சோலைகளிலே |
– |
பொழில் சோலைகளிலே |
|
மழை தவழும் |
– |
மேகங்கள் உலாவப் பெற்றதான |
|
நந்திபுரவிண்ணகரம், மனமே! நண்ணு–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘இறைகளவை’ என்பதற்கு – சரீரங்கள் என்று வியாக்யானத்தில் பொருளுரைக்கப்பட்டது; மண்டலபுருடனது நிகண்டில் – “இறை சிவன் கடன் வேந்தன் கையிறையிறுப்பிறை சிறந்தோள், சிறுமை புள்ளிறகு தங்கல், காபிமார்சென்னி கூனிறப் பிராறே” என்றதில் காண்கிற பன்னிரண்டு பொருள்களில் ‘தலை’ என்னும் பொருளும் இங்குக் கொள்ளக் கூடியதே.
வெறிய அவர் = “(இராவணன் நடுங்கினான். வில்லையும் கைவிட்டான்) என்றாற்போலே ஆயுதங்களை யொழிந்தவர்கள் என்கை. ‘எறிய’ என்றும் பிரிக்கலாம். அசுரர்கள் இறைகளவை – அம்புகளை, நெறு நெறென எறிய + பிரயோகிக்க, (அதன் பிறகு) அவர்வயிறழல நின்றபெருமான் என்னவுமாம்.
English Translation
Crushing the bodies of hefty glang-sized warning-while-teeth-faced Asuras, He makes them flee without rest or relifef from him, holding their big bellies burning with bruise. Peacocks and cockoos and flighty bumble bees are singing and dancing on tail mango trees. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.
