(1351)
வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!
பதவுரை
|
வெற்பால் மாரி பழுது ஆக்கி |
– |
கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும் |
|
விறல் வாள் அரக்கர் தலைவன் தன் |
– |
பலிஷ்ட்டனான இராவணனுடைய |
|
வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த |
– |
திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த |
|
வல் வில் |
– |
வலிய சார்ங்கத்தையுடையவனான |
|
இராமன் இடம் |
– |
இராமபிரான் வாழுமிடமாவது;- |
|
கற்பு ஆர் புரிசை செய் குன்றம் |
– |
சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும் |
|
கவின் ஆர் கூடம் |
– |
அழகிய க்ருஹங்களினாலும் |
|
மாளிகைகள் |
– |
மாளிகைகளினாலும் |
|
பொற்பு ஆர் மாடம் |
– |
அழகிய மண்டபங்களினாலும் |
|
எழில் ஆரும் |
– |
சோபை பொருந்திய |
|
புள்ளம் பூதங்குடி |
||
English Translation
With a mountain He rendered the rains powerless; he is our bow-wielder Rama who felled the twenty arms of the mighty Rakasa king of Lanka city. He resides in the well aid city of mountain like mansions, homes and Mandapas, -in Pullam-Budangudi, yes, always!
