(1354)
குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே.
பதவுரை
|
விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி |
– |
(கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து |
|
மாரி பழுது ஆ நிரை காத்து |
– |
மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும் |
|
சடையான் ஓட |
– |
ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின் |
|
அடல் வாணன் தட தோள் |
– |
செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை |
|
துணித்த தலைவன் இடம் |
– |
அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;– |
|
வண்டுகள் குடி ஆ உண்ண |
– |
வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி |
|
கோலம் நிலம் மட்டு உகுக்கும் |
– |
அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற |
|
புடை ஆர் கழனி எழில் ஆரும் |
– |
நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த |
|
புள்ளம் பூதங்குடி |
||
English Translation
Holding a mountain as an umbrella, the Lord Protected the cows against a rain. He let Siva flee with his retinue, and took only the arms of the warring Asura Bana. He resides, -where familes of bumble-bees hover over blue lily blossoms and drink their nectar in the ever-wet tanks, -in pullam-Budangudi, yes, always!
