(1474)
வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே.
பதவுரை
|
திரு விண்ணகரானே!- ; |
||
|
அடியேன்-; |
||
|
வேறே |
– |
விலக்ஷணமாக |
|
கூறுவது உண்டு |
– |
விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு; |
|
விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது |
– |
(நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல் |
|
நின் திருமனத்து |
– |
உன் திருவுள்ளத்தில் |
|
அடை |
– |
ஸாரமாகக் கொண்டருள வேணும்; |
|
உன்னை அல்லால் |
– |
உன்னையொழிய |
|
மற்று ஓர் தெய்வம் |
– |
வேறொரு தெய்வத்தை |
|
கூறேன் |
– |
வாய்விட்டுச் சொல்லமாட்டேன்; |
|
குணம் கொண்டு |
– |
(அவர்களிடத்தில்) குணவிசேஷத்தைக் கண்டாகிலும் |
|
நெஞ்சு தன்னால் |
– |
நெஞ்சினால் |
|
தேறேன் |
– |
(அவர்களை ஆச்ரயணீயராக) விச்வஸிக்கமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேன் வேறே கூறுவதுண்டு = தோற்றினபடி கும்பலில் சொல்லுகிற வார்த்தை போலல்லாமல் இவ்வார்த்தையை ரஹஸ்யமாய் மிக முக்கியமாக விண்ணப்பஞ்செய்கிறேனென்றபடி.
விரித்துரைக்குமாறே பணியாது = தேவரீர்க்கும் அடியேனுக்கும் நடக்கிற ஸம்வாதம் கீதா சாஸ்த்ரம் போலே விரிந்திருக்கவொண்ணாது; அதாவது – கீதையிலே முடிவாக அருளிச்செய்த சரமச்லோகத்தை முதலிலேயே அருளிச்செய்திருந்தால் அவ்வளவு நூல்விரிவு விளைந்திராது; தேவரீர் ஒன்று சொல்ல, அதற்கு அர்ஜுநன் கலங்கிப் பல கேள்விகள் கேட்க, அவற்றுக்கு தேவரீர் உத்தரமருளிச் செய்ய, அதற்குமேலும் பலபல சங்கைகள் தோன்றி அர்ஜுநன் கேள்விகள் கேட்க, இப்படியே கீதா சாஸ்த்ரம் விரிந்ததாயிற்று; அப்படியல்லாமல் இப்போது தேவரீர் ஸாரமாகத் திருவுள்ளம் பற்றவேணும்; அதற்குமேல் அடியேன் ஒன்றும் வாய்திறக்கும்படி யிருக்கவொண்ணாது; “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ” (சஞ்சலமற்று நிலைபெற்றேன், ஸந்தேகங்கள் தீர்ந்தேன், தேவரீர் சொன்னபடியே செய்கிறேன்) என்று கையெழுத்திடும்படி அருளிச்செய்யவேணுமென்கை. ‘ஆழ்வீர்! உம்மைத் திருவடி சேர்த்துக்கொண்டேன்’ என்றருளிச் செய்யவேணுமென்பதை தேர்ந்த பொருள்.
அடியேன் வேறுகதியற்றவனாகையால் இவ்வருள் செய்தே தீரவேணுமென்கிறார் பின்னடிகளில்.
English Translation
O Lord of Tiruvinnagar! Here is something I say do not make me dilate on it, but take it directly to your heart, I cannot praise any other god, nor even contemplate such praise.
