(1470)
மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே.
பதவுரை
|
கோனே |
– |
ஸ்வாமிந்! |
|
குறுங்குடியுள் குழகா |
– |
திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள |
|
நிற்பவனே!, |
– |
|
|
வரு புனல் சூழ் திரு விண்ணகரானே |
– |
பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! |
|
மான் ஏய் நோக்கு நல்லார் |
– |
மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது |
|
மதி போல் முகத்து உலவும் |
– |
சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற |
|
ஊன் எய் கண் வாளிக்கு |
– |
மாம்ஸமயமான கண்களாகிற பாணத்துக்கு |
|
உடைந்து |
– |
அஞ்சி நடுங்கி |
|
ஓட்டந்து |
– |
ஓடிவந்து |
|
உன் அடைந்தேன் |
– |
உன்னைச் சரணடைந்தேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாம்புக்கு அஞ்சி ஓடிவந்து விழுந்தேனென்பாரைப் போலவும், ராமாஸ்த்ரத்துக்கு நடுங்கி வந்து விழுந்தேனென்பாரைப் போலவும் மாதர்களின் கண்களாகிற அம்புக்கு அஞ்சி வந்து நின்னடைந்தேனென்கிறார். ஸ்த்ரீகள் ஆண்கள் ஆகர்ஷித்துக்கொள்வது கடைக்கண்ணோக்கினாலாதலால் ‘மானேய் நோக்குநல்லார்’ என்றார். அவர்களைச் சிறப்பித்தும் அவர்களுடைய முகத்தை வர்ணித்தும் இவர் கூறுவது காமுகர்களின் ஸமாதியாலென்க.
ஓட்டந்து ‘ஓட்டம் தந்து’ என்ற இரண்டு சொற்கள் ‘ஒட்டந்து’ என ஒரு சொல்லாயிற்று; சிதைவு; ஓடிவந்து என்றபடி.
குழகன் மஹானாயிருக்கும் தனது மேன்மையைப் பாராமல் சிறியாரோடுங் கலந்துபழகுமவன் என்கை.
திருநறையூர்த்தேனே! “பட்டர் ‘திருநறையூர்ப் பெருக்குக்குச் சினையாறுபடுகிறது கிடாய் என்றருளிச்செய்வர்” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. இதன் அழகிய கருத்தை அறிவீர்களோ? கேண்மின்; திருவிண்ணகர்த்திருப்பதி விஷயமான இத்திருமொழி முடிந்தவுடனே “கண்ணுஞ்சுழன்று” என்ற திருமொழிதொடங்கிச் “சினவிற்செங்கண்” என்ற திருமொழியளவும் நூறுபாசுரங்களாலே திருநறையூரை அநுபவிக்கப்போகிறாரே ஆழ்வார்; அதற்குள்ளே இப்போது ‘திருநறையூர்த்தேனே’ என்று அத்திருப்பதியைப்பற்றி ப்ரஸ்தாவம் செய்வானேன்? என்று நஞ்சீயர்போல்வார் பட்டரைக் கேள்விகேட்டனர்போலும்; அதற்கு பட்டர் அருளிச்செய்த மறுமாற்றமாம் இது; இதன் கருத்து யாதெனில்; ஆற்றில் பெருவெள்ளம் வரப்போவதற்குமுன்னே ஆறு பொசிந்துகாட்டுவது வழக்கம்; அது போலே, நூறு பாசுரங்களாலலே திருநறையூர்த் திருப்பதியனுபவமாகிற மஹாப்ரவாஹம் ஸமீபித்திருப்பதனால் அதற்கு முன்னடையாளமாகத் திருநறையூர்த்தேனே! என்று இவ்வாறு பொசிந்து காட்டுகிறதுகிடாய் என்கை. இங்ஙனே மிக அழகிய அர்த்தம் பட்டர்திருவுள்ளத்தில் தானே தோன்றும்.
English Translation
O Lord of Tiruvinnagar! My Liege! Beautiful one of Tirukkurungdi! Honey of Tirunaraiyur! Hit by the arrow-looks of moon-faced dames, I have come running to your feet, wounded.
