(1460)

(1460)

மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும்,

ஊனேராக்கை தன்னை உதவாமை யுணர்ந்துணர்ந்து,

வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே,

நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே.

 

பதவுரை

வானே மா நிலமே

நித்யவிபூதிக்கும் லீலா விபூதிக்கும் நிர்வாஹகனே!

உவந்து வந்து

(பரமபதத்தில் நின்றும்) உவப்போடேவந்து

என்மனத்து இருந்த தேனே

என்மனத்தில் நித்யவாஸம் பண்ணுகின்ற பரமபோக்யனே!

திரு விண்ணகர் மேயவனே!- ;

மான் ஏய் நோக்கியர்தம்

மானைப் போன்ற கண்ணழகையுடையரான ஸ்த்ரீகளினுடைய

வயிற்றுக் குழியில்

கர்ப்பக்குழியில் இருந்து கொண்டு

உழைக்கும்

கஷ்டப்படுமதாய்

ஊன் ஏய்

மாம்ஸாதிகள் நிறைந்ததான

ஆக்கை தன்னை

சரீரத்தினுடைய

உதவாமை உணர்ந்து உணர்ந்து

உபயோகமற்றதன்மையை நன்றாக அறிந்து

நின் அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்த உடல் எப்படிப்பட்டது? ஸ்த்ரீகளின் கர்ப்பப்பையிலே கிடந்து படாதபாடுகளும் பட்டு “தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு முடல்” என்கிறபடியே மாம்ஸாதிகள் மலிந்து கிடப்பது; இப்படிப்பட்ட உடற்பிறவி நமக்குத் தகாதென்று நன்குணர்ந்தேன்; அது தொலைவதற்காக உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; திருவிண்ணகர் மேயவனே!.

இரண்டாமடியில், “ஊனேயாக்கை”, “ஊனேராக்கை” என்பன பாடபேதங்கள். வானே! என்பதனால் நித்யவிபூதிநாதத்வமும், மாநிலமே! என்பதனால் லீலாவிபூதிநாதத்வமும் ஆக உபயவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டது.

‘வந்துவந்து’ என்றவிடத்து ‘வந்து உவந்து’ என்று பிரிப்பதேயன்றி, ‘வந்து வந்து’ என்று இரட்டைக்கிளவியாகவும் கொள்வர்.  பலகாலும் வந்து என்றபடி.  அதாவது – என்மனத்திலே புகுரவேணுமென்று நீ ஆசைகொண்டு வருவாய், நான் நெட்டித்தள்ளுவேன், ‘மறுபடியும் வேறொரு ஸமயம் பார்த்து வருவாய்; அப்போதும் நான் ஏமாறாதேயிருந்து நெட்டித் தள்ளுவேன், இப்படி நீ பலகாலும் வந்து வந்து ஸ்வசக்தியாலே என்மனத்தை இருப்பிடமாகக் கொண்டுவிட்டாய் என்றவாறு.  இதனால் எம்பெருமானுடைய அபிமான விசேஷம் விளங்கும்.

 

English Translation

O Lord residing in Tiruvinnagar! O Sky! O Earth O Honey residing in my heart!  Realising the futility of working for the pleasure of twon-eyed lurid dames, I have come to your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top