(1459)

(1459)

மறந்தே னுன்னைமுன்னம் மறந் தமதி யின்மனத்தால்,

இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில்

பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா

சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.


பதவுரை

திருவிண்ணகர் மேயவனே!- ;

உன்னை

(எப்போதும் ஸ்மரிக்கத் தகுந்தவனான) உன்னை

முன்னம்

முதலிலே

மறந்தேன்

மறந்தொழிந்தேன்;

(அதற்கு மேலே)

மறந்த மதி இல் மனத்தால்

இப்படி மறந்தோமே! என்கிற அநுதாப வுணர்ச்சியுமில்லாத மனத்தையுடைமையினால்

எத்தனையும்

மிகவும் (அசித்தைக் காட்டிலும்)

இறந்தேன்

நிஹீனனாகக் கெட்டுப் போனேன்;

அதனால்

ஆகையினாலே

இடும்பை

துக்கங்களுக்கு ஆஸ்பதமான

குழியில்

கர்ப்பக் குழியில்

பிறந்தே

இடைவிடாது ஜனன மரணங்களை யுடையனாய்க் கொண்டு

எய்த்து ஒழிந்தேன்

அனர்த்தப்பட்டுப் போனேன்;

திரு மார்பா பெருமான்

பிராட்டியை மார்பிலே யுடைய பெருமானே!

நின் அடிக்கே

உனது திருவடிகளுக்கே

சிறந்தேன்

(இப்போது) தகுந்தவனாக அமைந்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முழுக்ஷீவுக்கு அர்த்த பஞ்சகஜ்ஞாநம் முக்கியமானது; எம்பெருமானை உணர்தல் தன்னையுணர்தல், உபாயத்தையணர்தல், பேற்றையுணர்தல், பேற்றின் விரோதியையுணர்தல், ஆகிய இவை அர்த்த பஞ்சகஜ்ஞாநமெனப்படும்.  இதில் முதலதான பரஸ்வரூபஜ்ஞாநம் தமக்கு இல்லாமையை அருளிச்செய்கிறார் மறந்தேனுன்னை முன்னம் என்று.  முதல் முதலாக உன்னையன்றோ நான் மறந்தொழிந்தே  னென்கிறார்.  முன்னம் என்பதற்கு அநாதிகாலமாக என்றும் பொருள் கொள்ளலாம்.  கீழ்ப்பாட்டிற்சொன்னபடி பொருளின்பங்களைஆதரித்ததுபோல ஒரு மூலையில் உன்னையும் நான் ஆதரித்திருக்கலாமே, அந்தோ! அது செய்யப் பெற்றிலேன்!, உன்னை மறந்தே போனேன்.  ஒரு காலும் நெஞ்சிலும் நினைக்கக் கூடாதவற்றை (அர்த்தகாமங்களை) இடைவிடாது சிந்தித்தேன்; ஒரு நொடிப் பொழுதும் மறக்க வொண்ணாத உன்னை இறைப்பொழுதும் நினையாதொழிந்தேனந்தோ!. “த்யேயோ நாராயணன்ஸ் ஸதா”  என்று சாஸ்த்ரங்கள் முறையிடாநிற்க, பாவியேன் விபரீதனானேனென்கிறார்.  கீழ்க்கழிந்த காலங்களில் உன்னை நான் ஒருநாளும் ‘அறிந்திலேன்’ என்றன்றோ இங்குச் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்லாமல் மறந்தேன் என்னலாமோ? சிலகாலம் அறிந்திருந்து பின்னை அவ்விறவு மாறினாலன்றோ ‘மறந்தேன் என்று பிரயோகிக்கலாம்; இதுவரையில் உன்னைப்பற்றின அறிவு ஒருகாலுமெனக்கு உண்டாயிருக்கவில்லையென்று சொல்லவேண்டுமிடத்து மறந்தேனென்னலாமோ? என்று ஒரு சிறிய சங்கை பிறக்கக்கூடும்; இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்வது காண்மின் – “உன்னை யென்கிற விடத்திலே ஸம்பந்தத்தை ஸ்மரித்தவராகையாலே, அந்த ஸம்பந்தம் ஸ்வாபாவிகமேயாகையாலே சிலநாள் ஸ்மரித்து மறந்தாப்போலே தோன்றிற்று.” என்று.

இவ்விருள் தருமாஞாலத்தில் எம்பெருமானை மறப்பதென்பது ஹைஜமே; இது வியப்பன்று; ஆயினும், ‘இப்படி மறந்தொழிகின்றோமே!’ என்கிற அநுதாப வுணர்ச்சியாகிலும் இடையிடையே தோன்றுமாயின் நன்றாகும்; அந்தோ! அவ்வநுதாபமு மில்லாமையாலே கெட்டேனென்கிறார் மறந்த மதியில் மனத்தாலிறந்தேன் என்று.  இறந்தேன் என்றது சைதந்யம் கெட்டு அசேதநமேயாகப் பெற்றேனென்கை.  ‘எத்தனையும் இறந்தேன்’ என்கையாலே அசித்திற்காட்டிலும் கடைகெட்டவனானேன் என்பது பெறப்படும்.  அசித்துக்கு அடியோடு உணர்ச்சியில்லாமையாலே அது பகவத் விஷயத்தை நினையாதிருப்பது ஸஹஜம்; அறிவுக்கு நிலமான நான் அறிவின் காரியம் பெறாமையாலே அசித்திலும் கடைகெட்டேனென்கை.

அதனாலிடும்பைக்குழியில் பிறந்தே எய்த்தொழிந்தேன் = அநுதாபமு மில்லாமையால்தான் மேன்மேலும் துக்கங்களையே விளைவிக்கக் கடவதான ஸம்ஸாரத்திலேயே பிறப்பது மிறப்பதுமாய் அநர்த்தப்பட்டுப்போனேன்.

 

English Translation

O Lord residing in Tiruvinnagar! I had forgotten you then. In that forgotten mindless state, I lost all and fell into the trap of birth-death, cycles, suffering pain and miseries.  My Lord, with Sri on your chest!  I have come to your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top