(1464)
வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
திரு விண்ணகர் மேயவனே!- ; |
||
|
எந்தாய் |
– |
ஸ்வாமிந்!, |
|
யான் |
– |
அடியேன் |
|
வேறு ஆ |
– |
விலக்ஷணமாக |
|
இரந்தேன் |
– |
யாசிக்கின்றேன்; |
|
வெகுளாது |
– |
சீற்றமி்ன்றி |
|
மனக்கொள் |
||
|
ஐவர் |
– |
பஞ்சேந்திரியங்கள் |
|
அடியேனை |
– |
அடியேனை |
|
ஆறா வெம் நரகத்து |
– |
ஓய்வில்லாத கொடிய ஸம்ஸாரநரகத்திலே |
|
இடக் கருதி |
– |
தள்ள நினைத்து |
|
கூது ஆ |
– |
என்னைத் தங்களுக்குப் பாகமாகக் கொண்டு |
|
வந்து |
– |
என்னைக் கிட்டி |
|
குமைக்க |
– |
ஹிம்ஸிக்க, |
|
குடி விட்டவரை |
– |
(நீ என்னை நல்வாழிப் படுத்துகைக்காக ஸ்ருஷ்டிகாலத்தில் என்னிடத்தில்) குடியிருக்கச்செய்த அந்த இந்திரியங்களை |
|
தேறாது |
– |
நம்பாமல் |
|
உன் அடைந்தேன். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேறா யானிரந்தேன் = உலகத்தில் வேண்டுகோள் இரண்டுவகைப்படும்; வேண்டினவுடனே பெறவேண்டிய நிர்ப்பந்தமின்றிக் காலக்ரமத்தில் பெறாலம்படியான பொருள்களைப் பற்றின வேண்டுகோள் ஒன்று; வேண்டினவுடனே கிடைத்தாலன்றி உயிர்தரிக்கமுடியாமல் அப்போதே பெறவவேண்டின பொருளைப்பற்றின வேண்டுகோள் மற்றொன்று. இவ் விரண்டுவகையான வேண்டுகோளில் இரண்டாவது வகையான வேண்டுகோளை இப்போது அடியேன் செய்கின்றேனென்றவாறு. ‘வேறா’ என்பதன் கருத்து இது. பஞ்சேந்திரியங்களாகிற படுகொலைக்காரர் கையில் இனி நான் ஒரு நொடிப்பொழுதும் நலிவுபடமுடியாதாதலால் இந்த க்ஷணத்திலே அடியேனை உனதருளால் வாங்கிவிடவேணுமென்று பிரார்த்திக்கின்றேனென்கை.
யான் இரந்தேன் = ‘இரந்தேன்’ என்றாலே போதும்; ‘யான்’ என்னும் எழுவாய் தன்னடையே வந்துபுகும்; அப்படியிருக்கவும் “யானிரந்தேன் என்றதற்கு ஒரு கருத்துண்டு; “எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதிசூழ்ந்ததா லெனக்கோலம் மான் திரிவிக்கிரமனையே” என்னுமாபோலே என்னைத் திருத்திப் பணிகொள்வதற்காகப் படாத பாடுகள் நீ படுகிறாய் என்று பிரஸித்தமாயிருக்கின்றது; தன் ஸொத்துக்கு ஒரு கெடுதல் நேர்ந்தால் அதனைத்தீர்த்து மகிழ்தல் ஸ்வாமியின் கடமையாதலால் உன்னுடைய சொத்தாகிய அடியேனுடைய கெடுதியைத் தீர்ப்பது உனக்கே பணியாயிருந்தும் இது என்னுடைய காரியம் போலே நான் வேண்டும்படியாயிற்றே!, ‘அந்தோ ! நம் காரியத்திற்கு இவன் வேண்டிக்கொள்ளுகிறானே, என்று திருவள்ளம்பற்றியாகிலம் இரங்கலாகாதோ? என்றவாறு. “நீ இரக்க, மறுத்துத்திரிந்த நானன்றோ இப்போது இரக்கிறேன்” என்பர் பெயவாச்சான் பின்ளையும்.
எந்தாய்! வெகுளாது மனக்கொள் = நான் இப்போது வேண்டிக்கொள்வது தேவரீர் திருவுள்ளத்திற்கு மிக்க சீற்றமேயாகும்; ‘நெடுநாள் நாம் எதிர்பார்த்திருந்தபோதெல்லாம் நம்மை அலக்ஷ்யஞ்செய்தொழிந்த இவன் இப்போது ஏதுக்கு நிர்ப்பந்திக்கிறான்?’ என்று பாவியேன்மீது திருவுள்ளம் சீற்க்கூடும்; அங்ஙனேயாகவொண்ணாது; எந்தையான முறைமையை நினைத்துச் சீறாமல் திருவுள்ளம்பற்றவேணுமென்கிறார்.
தம்முடைய விவக்ஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் ஆறாவெந்நரகத்தென்று தொடங்கி. இந்திரியங்களினுடைய எண்ணம் மிகவும் பொல்லாததாயிருக்கின்றது; ‘தேவரீர்க்கு எல்லாவடிமைகளும் செய்யப்பெறவேணும்’ என்று பாரித்திருக்கிற என்னை அஹங்கார மமகாரங்களுக்குக் குடிமைசெய்யும் ஸம்ஸாரத்திலே தள்ளநினைத்து நலிகின்றனவே இந்திரியங்கள்; இந்த நலிவு என்னாலே பொறுக்கப்போறதில்லை; இன்னமும் என்னென்ன தீங்குகள் செய்ய நினைத்திருக்கின்றனவோ தெரியவில்லை; அஞ்சினாருடைய அச்சமெல்லாம் தீருமாறு திருவிண்ணகரிலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிற தேவரீரைச் சரணம் புகுகின்றேன், காத்தருள வேணுமென்கை. அஃறிணையான ஐம்பொறிகளை ஐவர் என்று உயர்திணையாகச் சொன்னது இழிவினாலும் சீற்றத்தின் மிகுதியாலுமென்க; திணைவழுவமைதி.
குடிவிட்டவரை = “விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும்” என்கிறபடியே உன்னை வழிபடுவதற்குப் பாங்காக உன்னாலே இவ்வுடலில் குடியிருக்கச் செய்யப்பட்ட பஞ்சேந்திரியங்களென்கை. தேறாது = இவை உன்னுடைய உத்தேசத்தின்படி நடவாம்ல் விபரீதமான மார்க்கத்திலே நடக்கத் துணிந்தமையால் இவற்றை நான் நம்பாமல் உன்னை வந்து பணிந்தேன். இதனால் இந்திரியங்களைத் தாம் வென்றமை வெளியிடப்பட்டதாகும்.
English Translation
O Lord residing in Tiruvinnagar! My Lord! I beg of you, please do not get angry. The senses you gave to reside in me are intent on sending me to terrible hell. I cannot trust them. I have come to your feet.
