(1454)
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
இருக்கு உறும் அந்தணர் |
– |
வேதம் வல்லவரான பிராமணர்கள் |
|
அமரர்கள் |
– |
தேவதைகளினால் |
|
பெருக்க மொடு அமர |
– |
(தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக |
|
சந்தியின் வாய் |
– |
ஸந்தியா காலந்தோறும் |
|
உருக்குறு நறு நெய் கொண்டு |
– |
உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு |
|
ஆர் அழலில் |
– |
ஆர்ந்த அக்நியில் |
|
நல்கும் |
– |
ஹோமம் பண்ணுவதற் குறுப்பான |
|
இருக்கினில் |
– |
வேதத்திலுள்ள |
|
இன் இசை ஆனவனே |
– |
பிரணவத்திற்குப் பிரதிபாத்யனானவனே! |
|
ஆண்டாய் * * * வேண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேதமோதியுணர்ந்த அந்தணர்கள் ஸந்த்யாகாலந்தோறும் உருக்கின நெய்யைக் கொண்டு அக்நியில் ஹோமம் செய்வதற்கு மந்திரமாகிய யாதொரு வேதமுண்டு, அதன் உறுப்பாகிய பிரணவத்தினால் ப்ரதிபாத்யனா யுள்ளவனெ!.
இருக்கு = வடசொல்லிகாரம்; இச்சொல் வேதங்களுக்குப் பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்குச் சிறப்புப் பெயருமாக வழங்கும் சந்தி – ஸந்த்யா.
இன்னிசையானவனே = ‘இசை’ என்னுஞ் சொல் லக்ஷிதலக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும்; எங்ஙனேயெனில், இசையாவது ஸ்வரம்; ஸ்வரமென்பது பிரணவத்திற்கும் வாசகம்; “யத்வேதாதௌஸ்வர: ப்ரோக்த:” என்றது காண்.
English Translation
Lighting the fire-altar morning and evening. Vedic seers offer Ghee obiations, chanting the Mantras of Vedas to gods, -you become the music of their Rig-Yajus-Sama. O Lord! if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!
