(1455)
காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.
பதவுரை
|
போது அலர் நெடு முடி |
– |
உரிய காலங்களிலுண்டான புஷ்பங்களை யணிந்த நீண்ட திருவபிஷேகத்தையுடைய |
|
புண்ணியனே |
– |
பரிசுத்தனே! |
|
இளையவர் |
– |
இளம்பெண்கள் |
|
காதல் செய்து |
– |
அன்பு செய்து |
|
தரும் |
– |
கொடுக்கிற |
|
வேதனை |
– |
துக்கரூபமான |
|
கலவி அது |
– |
கலவிக்கு அடியாகவுள்ள |
|
வினை |
– |
கருமமானது |
|
ெருவுதல் ஆம் |
– |
(எனக்கு) அச்சந்தருவதாக வுள்ளது; |
|
ஆதலில் |
– |
ஆகையினால், |
|
உனது அடி நான் அணுகுவன் |
– |
(அந்தக் கருமம் தொலையும்படி) உனது திருவடிகளை நான் வந்து பணிகின்றேன்; |
|
ஆண்டாய் * * * வேண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் செய்த தீவினைகளை நினைக்கப் புகுந்தால் எனக்கு உடல் நடுங்குகின்றது; அநர்த்தங்களிலே கொண்டு மூட்டும்படியான விஷயாந்தர போகங்களுக்குக் காரணமான தீவினைகள் பல்லாயிரம் நான் செய்துளே னாதலால் அத்தீவினைகளின் பலனாக இன்னமும் நாம் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்க நேருமோவென்று மிகவும் அஞ்சா நின்றேன்; திருவிண்ணகர் மேயவனே! உனது திருவடிகள் அஞ்சினார்க்குப் புகலிடமாதலாலும், நீ தானும் ஆச்ரிதாக்ஷணம் பண்ணக்கடவேனென்று வளையம் குடியிருக்கிறாயாதலாலும் என் அச்சந்தீர உன் திருவடிகளை வந்து பணிந்தேன்; உன்னையொழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம்படி என்மீது அருள்புரிவாயாகில் நன்று என்றாராயிற்று.
English Translation
Pleasure that the lurid-dames offer to charm is filled with much pain and the fear of my death, therefore I came to you seeking your feet, Lord wearing fresh Tulasi wreath and a crown! O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!
