(1326)
கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,
எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,
திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
புண்ணின் அன்ன மெல் மொழியாள் கண்ணன் என்றும் |
– |
இசைப்பாட்டோடு ஒத்த மிருதுவான பேச்சை உடையளான என் மகளானவள், ஸ்ரீ கிருஷ்ணன் என்றும், |
|
வானவர்கள் |
– |
தேவர்கள் |
|
காதலித்து |
– |
பக்தியோடு கூடி |
|
மலர்கள் தூவும் எண்ணன் என்றும் |
– |
புஷ்பங்களை ஸமர்ப்பிக்கும் படியாக அவர்களுடய எண்ணத்திலே வஸிப்பவன் என்றும், |
|
இன்பன் என்றும் |
– |
ஆனந்தம் அளிப்பவனென்றும் |
|
ஏழ் உலகுக்கு ஆதி என்றும் |
– |
எல்லா உலகங்களுக்கும் காரணபூதன் என்றும் |
|
திண்ணம் மாடம் நீடு நாங்கை |
– |
திடமான மாடமாளிகைகள் ஓங்கி யிருக்கப்பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற. |
|
தேவதேவன் என்று என்று ஓதி |
– |
தேவாதி தேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு |
|
பார்த்தன்பள்ளி பாடுவாள்– |
||
English Translation
“Calling “Krishna!” gods adore and offer worship with flowers, the Lord residing sweetly in the hearts of all the four-and-three-worlds!” “Sturdy wall-surrounded Nangai, -Deva-deva Lord is he!”, Sweet as music of the pann, my daughter sings of Parttan-Palli, O!
