(1437)
வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே,
பதவுரை
|
வண்டு அறை பொழில் |
– |
வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய |
|
திருப்பேர் |
– |
திருப்பேர் நகரில் |
|
வரி அரவு அணையில் |
– |
வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே |
|
பள்ளி கொண்டு |
– |
சயனித்துக்கொண்டு |
|
உறைகின்ற மாலை |
– |
நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து, |
|
கொடி மதிள் மாடம் மங்கை |
– |
கொடி கள் விளங்கப்பெற்ற மதிள்களையும் மாளிகைகளையு முடைத்தான திருமங்கையில் அவதரித்தவராய் |
|
திண்திறல் தோற் கலியன் |
– |
மிக்க வலிமைகொண்ட திருத்தோள்களையுடையரான ஆழ்வார் |
|
செம் சொலால் |
– |
அழகிய சொற்களைக் கொண்டு |
|
மொழிந்த |
– |
அருளிச்செய்த |
|
மாலை இவை |
– |
இச்சொல்மாலையை |
|
கொண்டு |
– |
அதிகரித்து |
|
பாடி ஆட |
– |
பாடவுமாடவும் பெற்றால் |
|
நீள் விசும்பு கூடுவர் |
– |
பரமபதம் சென்று சேரப்பெறுவர்கள், |
English Translation
This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper reclining on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.
