(1321)

(1321)

கொல்லை யானாள் பரிசழிந்தாள் கோல்வ ளையார் தம்முகப்பே,

மல்லை முன்னீர் தட்டிலங்கை கட்ட ழித்த மாயனென்றும்,

செல்வம் மல்கு மறையோர்நாங்கை தேவ தேவ னென்றென்றோதி,

பல்வ ளையா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!

 

பதவுரை

பல் வளையாள் என் மடந்தை

பல வளைகளை அணிந்திருந்த என் பெண்ணானவள்

கோல் வளையார் தம் முகப்பே

அழகிய வளைகளையுடைய பெண்களின் முன்னே

கொல்லை ஆனாள்

வரம்பு அழிந்தவளானாள்;

பரிசு அழிந்தாள்

பெண்மைக்கு உரிய மரியாதைகள் அழியப்பெற்றாள்

மல்லை முந்நீர் தட்டு

செல்வம் மிக்க கடலை அடைத்து

இலங்கை

லங்காபுரியை

கட்டழித்த மாயன் என்றும்

த்வம்ஸம் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதன் என்று சொல்லிக்கொண்டும்

செல்வம் மல்கு மறையோர் நாங்கை

செல்வம் நிறைந்த வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள

தேவ தேவன் என்று என்று ஓதி

தேவாதி தேவன் என்று பலகால் சொல்லிக்கொண்டும்

பார்த்தன் பள்ளி பாடுவாள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நேற்றுவரையில் ஒருவரம்பிலே கிடந்தவிவள் இன்று வரம்பு கடந்தவளாயினள்; பெண்மைக்கு உரிய நாண் மடம் அச்சம் முதலிய குணங்களைக் கைவிட்டாள்;  வேற்று மனிசரைக் கண்டால் நாணி வாய்மூடிக் கிடந்த விவள் பல பெண்டிர்களின் எதிரே தன் தலைமகனுடைய வீரச்செயல்களைச் சொல்லத் தொடங்கி, கடலிலே அணைகட்டினவன் என்றும் இலங்கை பாழ்படுத்த பெருமிடுக்கன் என்றும் சொல்லுகின்றாள்.  (ஒருபிராட்டிக்காகப் படாதனபட்டு அரும்பெருங் காரியங்கள் செய்தவன் என் விஷயத்திலே உபேகஷையாயிருக்கின்றான் என்பதாகச் சொல்லுகிறாளாகவுமாம்.)

பல்வளையாள் – பல வளைகளை யிட்டு அலங்கரித்து வைத்தால் இவள் இப்படி பகவத் விஷயத்தி லீடுபட்டு உருகி உடம்பு மெலிந்து வளை கழலப்பெற்றாள் காண்மின் என்ற குறிப்பு.

 

English Translation

Expelled by her bangled friends and cheated of her lustre-wealth, “Stranger-Lord you made a wreck of ocean-girdled Lanka city!”, “Lord Living with seers in Nangai, Deva-deva prosperously, “Like a parrot, my gold-bangled, daughter sings of parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top