(1313)
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே’
பதவுரை
|
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் |
– |
கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே! |
|
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் |
– |
விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் |
|
திருவெள்ளக் குளத்து உறைவானே |
– |
திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே! |
|
செல்வா |
– |
செல்வனே! |
|
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய் |
– |
(எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும். |
English Translation
O Lord who parted the ocean with rock and sand, residing in Nangur with godly learned seers! Wealth of the residents, -Tinivellakulam Lord! Grace that I be rid of my karmic misery.
