(1311)

(1311)

கானார் கரிகொம் பதொசித்த களிறே,

நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,

தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.

 

பதவுரை

கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே

காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே!

நானாவகை நல்லவர்

(குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள்

மன்னிய

பொருந்திவாழ்கிற

நாங்கூர்

திருநாங்கூரில்

தேன் ஆர் பொழில் சூழ்

தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட

திருவெள்ளக் குளத்துள்

திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற

ஆனாய்

ஆனை போன்றவனே

அடியேனுக்கு அருள்புரியாய்

அடியேன் மீது கிருபை பண்ணவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கானார் கரி – கம்ஸனுடைய யானை ராஜதானியில் வளர்ந்ததாயிருக்க, அதனைக் காட்டில் வளர்ந்ததாகச் சொல்லுவதற்குக் கருத்து யாதெனில்; காட்டில் வேண்டினபடி தினறு, வேண்டினபடி திரிந்து கொழுப்படைந்த யானைபோலே கொழுத்துக்கிடந்தது என்பதாம்.

 

English Translation

O Lord who pulled out the tusk of an elephant, Residing in Nangur with many learned ones! Nectared fruit orchards –Tiruvellakulam Lord!  Elephant! Relieve me of my karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top