(1310)

(1310)

குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,

நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்

சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்

நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.

 

பதவுரை

குளிர்மாரி குன்றால் தடுத்து

(திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து

ஊகந்தானே

திருவுள்ளம் மகிழ்ந்தவனே!

நன்று ஆய பெரு புகழ் வேதியர்

விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற

நாங்கூர்

திருநாங்கூரில்

சென்றார் வணங்கும்

வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற

திருவெள்ளக்குளத்துள்;

நின்றாய்

நின்றருள்கின்ற

நெடியாய்

ஸர்வேச்வரனே!,

அடியேன் இடர் நீக்கு

அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள்.

 

English Translation

Lord who lifted the mountain to stop the rains, Residing in Nangur amid the famous seers! Pilgrimage centre-Tiruvellakulam Lord! Ancient one! Rid me of my karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top