(1309)

(1309)

கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,

நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,

செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்

எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.


பதவுரை

கொந்து ஆர்  துவளம் மலர் கொண்டு அணிவானே

பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!,

நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர்

ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில்,

செந்தாமரை நீர்

செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான

திருவெள்ளக் குளத்துள்

திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற

எந்தாய்

என் ஸ்வாமியே!

அடியேன் இடரை களையாய்

அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருளவேணும்.

 

English Translation

O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord!  Elder, pray rid me of my karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top