(1308)
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.
பதவுரை
|
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய் |
– |
இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே! |
|
நண்ணார் முனை |
– |
சத்துருக்களுடைய யுத்தத்திலே |
|
வென்றி கொள்வார் |
– |
வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள் |
|
மன்னு |
– |
வாழ்கிற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
திண் ஆர் மதிள் சூழ் |
– |
திடமான மதிளாலே சூழப்பட்ட |
|
திருவெள்ளக்குளத்துள் |
– |
திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற |
|
அண்ணா |
– |
அண்ணனே! |
|
அடியேன் இடரை களையாய் |
– |
அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருள வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று. ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.
English Translation
O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery.
