(1307)

(1307)

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்

காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,

கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

 

பதவுரை

மா வளம் பெருகி மன்னு மறையலர் வாழும் நாங்கை

மிக்க செல்வமானது அபிவிருத்தியடைந்து பொருந்தியிருக்கிற வைதிகர்கள் வாழுமிடமான திருநாங்கூரில்

காவளம்பாடி மேய கண்ணனை

திருக்காவளம்பாடியில் எழுந்தருளியுள்ள எம்பொருமான் விஷயமாக

கலியன் சொன்ன

திருமங்கையாழ்வாரருளிச் செய்த

வளம் பா பத்தும் வல்லார் தாம்

அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள்

பார் மிசை அரசர் ஆகி

பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு

கோ இள மனனர் தாழ

(மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு

குடை நிழல் பொலிவர்

ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “மோக்ஷத்தைப் மாகச் சொல்லில் அதிகாரிகளைக் கிடையாதென்று, அபிமதஸாதன மென்னவே கற்பர்கள்; பின்னை மோக்ஷத்திலே கொடுபோய் மூட்டுகிறோமென்று ஐச்வர்யத்தைப் பலமாகச் சொல்லிற்று.” என்று.

 

English Translation

This garland of songs on Krishna, resident of Kavalampadi, rich with the learning of Vedic seers, is offering made by kaliyan.  Those who master it will be parasoled rulers of the Earth. Worshipped by vassal kings.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top