(1294)

(1294)

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,

நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்

தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

 

பதவுரை

குன்றமும்

மலைகளும்

வானும்

ஆகாசமும்

மண்ணும்

பூமியும்

குளிர் புனல்

குளிர்ச்சியே இயற்கையான நீரும்

திங்களோடு

சந்திரனும்

நின்ற

நிலைநின்ற

வெம் சுடரும்

ஸூர்யனும்

அல்லா நிலைகளும்

மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும்

ஆய

தானேயாயிருக்கப்பெற்ற

எந்தை

எம்பெருமான்

(எவ்விடத்திலுள்ளானெனில்;)

மன்றமும்

பெரிய வீதிகளும்

வயலும்

கழனிகளும்

காவும்

தோட்டங்களும்

மாடமும்

மாட மாளிகைகளும் ஆகிய

எங்கும்

எல்லாவிடங்களிலும்

தென்றல்

தென்றல் காற்றானது

மணம் கொண்டு

பரிமளத்தை வீசிக்கொண்டு

வந்து உலவும்

ஸஞ்சரிக்கப்பெற்ற

நாங்கூர், திருமணிக்கூடத்தான்

 

English Translation

The Lord who is manifest as the mountains, the sky, the Earth, the coal waters, the moon, the Sun and all else resides at Nangur in Tirumanik-kudam with wide roads, fertile fields, groves and mansions, while the breeze blows through all these wafting fragrance everywhere.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top