(1294)
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
பதவுரை
|
குன்றமும் |
– |
மலைகளும் |
|
வானும் |
– |
ஆகாசமும் |
|
மண்ணும் |
– |
பூமியும் |
|
குளிர் புனல் |
– |
குளிர்ச்சியே இயற்கையான நீரும் |
|
திங்களோடு |
– |
சந்திரனும் |
|
நின்ற |
– |
நிலைநின்ற |
|
வெம் சுடரும் |
– |
ஸூர்யனும் |
|
அல்லா நிலைகளும் |
– |
மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும் |
|
ஆய |
– |
தானேயாயிருக்கப்பெற்ற |
|
எந்தை |
– |
எம்பெருமான் |
|
(எவ்விடத்திலுள்ளானெனில்;) |
||
|
மன்றமும் |
– |
பெரிய வீதிகளும் |
|
வயலும் |
– |
கழனிகளும் |
|
காவும் |
– |
தோட்டங்களும் |
|
மாடமும் |
– |
மாட மாளிகைகளும் ஆகிய |
|
எங்கும் |
– |
எல்லாவிடங்களிலும் |
|
தென்றல் |
– |
தென்றல் காற்றானது |
|
மணம் கொண்டு |
– |
பரிமளத்தை வீசிக்கொண்டு |
|
வந்து உலவும் |
– |
ஸஞ்சரிக்கப்பெற்ற |
|
நாங்கூர், திருமணிக்கூடத்தான் |
||
English Translation
The Lord who is manifest as the mountains, the sky, the Earth, the coal waters, the moon, the Sun and all else resides at Nangur in Tirumanik-kudam with wide roads, fertile fields, groves and mansions, while the breeze blows through all these wafting fragrance everywhere.
