(1288)

(1288)

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு

காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,

பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்

தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

 

பதவுரை

தும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி

துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும்

முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி

வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து

கடு மழை காத்த எந்தை

கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான்,

(எவ்விடத்திலுள்ளானென்னில்);

பூ புனல் பொன்னி

அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது

முற்றும் புகுந்து

எங்கும் பாய்ந்து

பொன்

பொற்குவியல்களை

வரண்ட

கொண்டுவந்து தள்ளப்பெற்றதும்

எங்கும்

கண்டவிடமெங்கும்

தேம் பொழில் கமழும்

தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான

நாங்கூர்

திருநாங்கூரில்

திருமணிக் கூடத்தான்

திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில், ‘பணைக்கைஎன்றும் பாடமுண்டு; பருத்த கையையுடைய என்றபடி மூன்றாமடியிலும் முற்றும்’ ‘முற்றம்என்பன பாடபேதங்கள்.  வரண்ட தள்ள; “மழைப்பேரருவி மணிவரண்டி வந்திழியஎன்ற திருமழிசைப்பிரான் பிரயோகமுங்காண்க.

 

English Translation

The Lord who saves the elephant in distress and lifted a mount to protect the cows against rain resides at Nangur in Tirumanik-kudam where the rivet kaveri flows into fragrant groves everywhere, and lashes out grains of gold.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top