(1288)
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
பதவுரை
|
தும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி |
– |
துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும் |
|
முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி |
– |
வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து |
|
கடு மழை காத்த எந்தை |
– |
கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான், |
|
(எவ்விடத்திலுள்ளானென்னில்); |
||
|
பூ புனல் பொன்னி |
– |
அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது |
|
முற்றும் புகுந்து |
– |
எங்கும் பாய்ந்து |
|
பொன் |
– |
பொற்குவியல்களை |
|
வரண்ட |
– |
கொண்டுவந்து தள்ளப்பெற்றதும் |
|
எங்கும் |
– |
கண்டவிடமெங்கும் |
|
தேம் பொழில் கமழும் |
– |
தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
திருமணிக் கூடத்தான் |
– |
திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலடியில், ‘பணைக்கை’ என்றும் பாடமுண்டு; பருத்த கையையுடைய என்றபடி மூன்றாமடியிலும் ‘முற்றும்’ ‘முற்றம்’ என்பன பாடபேதங்கள். வரண்ட – தள்ள; “மழைப்பேரருவி மணிவரண்டி வந்திழிய” என்ற திருமழிசைப்பிரான் பிரயோகமுங்காண்க.
English Translation
The Lord who saves the elephant in distress and lifted a mount to protect the cows against rain resides at Nangur in Tirumanik-kudam where the rivet kaveri flows into fragrant groves everywhere, and lashes out grains of gold.
