(1278)

(1278)

மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை

கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,

நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,

சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

 

பதவுரை

பள்ளத்து

தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள

நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த

பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த

பகு வாய் நண்டின்

விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய

சேறு அளையில்

சேறுமிக்க விளையிலே

இள கமுகின் முது பாளை

இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது

வெண்முத்தம் சிந்து

வெளுத்த முத்துக்களை இறைக்கப்பெற்ற

நாங்கூர்

திருநாங்கூரில்

திருத்தெற்றியம்பலத்து

திருத்தெற்றியம்பலம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள

என்

எனக்கு ஸ்வாமியாய்

செம் கண் மால்

செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் (எப்படிப்பட்டவனென்றால்,)

மாறு அரசர் மணி முடியும் திறலும் தேசும்

பகைவரான (துரியோதனன் முதலிய) அரசர்களினுடைய மாணிக்கங்களிழைத்த கிரீடங்களும் வலியும் தேஜஸ்ஸும்

அவர்தம் காதலிமார் குழையும்

அவ்வரசரது மனைவியின் காதணியும்

தந்தை கால்  தளையும்

தன் தகப்பனாரான வஸுதேவருடைய காலிலே இடப்பட்டிருந்த விலங்கும்

உடன் கழல

ஏககாலத்திலே ஒழியும்படியாக

வந்து தோன்றி

திருவவதரித்தவனாயும்

கதம் நாகம்

சீற்றத்தையுடைய கஜேந்திராழ்வானை

காத்து அளித்த

ரக்ஷித்தருளினவனாயுமுள்ள

கண்ணர்கண்டீர்

கண்ணபிரான் காண்மின்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நூற்றிதழ்கொள் இத்யாதி.) வடமொழியில் தாமரைக்கு ‘சதபத்ரம்’ என்றொரு பெயர் உண்டாதலால் அதற்கு இணங்கிய விசேஷணமாம் இது.  நண்டுகள் உணவுக்காகத் தாமரைப் பூவிலே சென்று புகுவதுண்டு; அங்ஙனம் போயிருக்கும் போது அந்த நண்டின் வளையில் பாக்குப் பாளைகளினின்று வெண்முத்துக்கள் இறைக்கப்பட்டு வளை மூடப்படுகின்றதாம் திருநாங்கூரில்.

 

English Translation

See, the Lord, saviour of the elephant, who took birth as Krishna rand; felled the crowns of enemy kings; – their strength, their glory, and their “Wives” jewels two fell; the fetters on his father’s feet also fell, is my Senkanmai who resides of Nangur, -where the male pincer-crabs enter the hundred-petalled lotus blooms in water tanks and Areco trees spill pearls of flower buds, -in his temple of Tirutetri Ambalam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top