(1264)

(1264)

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்,கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

ஒண் திறல் பொன் பெயரோன் உளைய

பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி

தனது உரம்பிளந்து

அவனுடைய மார்பைக் கிழித்து

உதிரத்தை அளையும்

(அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த

வென் சினத்து அரி

உக்ரஸிம்ஹனானவனும்

பரி கீறிய

குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான

அப்பன்

ஸ்வாமி

வந்து உறை கோயில்;

இளைய மங்கையர்

சிறுபெண்கள் (நர்த்தனமனாடும்போது உண்டான)

இணை அடி சிலம்பினோடு

இரண்டுகால்களிலும் அணிந்த தண்டைச் சிலம்பின் ஒலியோடு கூட,

ஏழில்கொள் பந்து அடிப்போர் கை வளையில் நின்று

அழகுபொருந்திய பந்தடிக்கும் சிறுமிகளினுடைய கைவளையல்களினின்று உண்டான

ஓலிமல்பிய நாங்கூர்

ஓசையானது நிறைந்த திருநாங்கூரில்

வண்புருடோத்தமம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

திருநாங்கூரில் சிறுமிகள் நர்த்தமனமாடுவார் சிலரும் பந்தடிப்பார் சிலருமாயிருக்கையாலே அன்னவர்களது காற்சிலம்புகளின் ஒலியும் கைவளைகளின் ஒலியுமே ஓங்கி மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப்படுத்தி நிற்குமென்று நகர்ச்சிறப்பு சொல்லிற்றாயிற்று, பின்னடிகளில்.

 

English Translation

The Lord who came as a fierce man-lion and destroyed the Asura Hiranya by tearing into this chest with his blood-dripping claws, is my father, who ripped the horse’s jaws.  He resides at Nangur, -where the sounds of anklets and bangles of the girls playing ball never ceases, -in the temple of Van-Purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top