(1262)
சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.
பதவுரை
|
சாடு கோய் விழ |
– |
(அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி |
|
தாள் நிமிர்த்து |
– |
திருவடிகளைத் தூக்கினவனாயும் |
|
ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட |
– |
ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில் |
|
வாணனை |
– |
பாணாஸுரனை |
|
ஆயிரம் தோள்களும் |
– |
ஆயிரந் தோள்கயையும் |
|
துணித்தவன் |
– |
அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான் |
|
உறை கோயில்; |
||
|
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் |
– |
அசையாநின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக்கிளம்பி |
|
பகலவன் ஒளி மறைக்கும் |
– |
ஸூர்யனுடைய பிரதாபத்தை மறையச்செய்யப்பெற்ற |
|
மாடம் மாளிகை சூழ்தரு நாங்கூர் |
– |
மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில் |
|
வண்புருடோத்தமம் |
||
English Translation
The Lord who smote the devil-cart with his foot, then cut the thousand arms of Bana and put his retinue to flight, resides of Nangur, -where pennons on mansion-top penetrate the sky and stop the Sun’s ascent, -in the temple of van-purushottamam.
