(1227)

(1227)

வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்

தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன் கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,

கண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,

விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.

 

பதவுரை

என்றும் தொண்டு ஆய தொல் சீர்வயல் மங்கையர்கோன் கலியன

நித்ய கைங்காரியம் செய்வதையே ஸஹஜகுணமாகவுடையரும் வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க் குத் தலைவருமான ஆழ்வார்

ஒலி செய்தமிழ் மாலை

அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை

வல்லார்

ஓதவல்லர்கள்

கண்டார்வணங்க

கண்டவரெல்லாம் காலிலே விழும்படி

காளியனை மீதே

மத்தகஜத்தின் மேலேறி (இருந்து)

கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்

கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி

விண் தோய் நெடு வெண்குடை நிழலின் கீழ்

வானத்தளவுமளாவிய நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து

விரி நீர்உலகு ஆண்டு விரும்புவர்

ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரம்மாண்டத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இஹலோக புருஷார்த்தங்களை பலனுகக் கூறுதலில் ஆழ்வார்க்கு ஊற்றமில்லை யாயினும், மருந்துதின்னப் பின்வாங்கும் பயல்களை வெல்லக்கட்டியைக் காட்டி ருசிப்பிப்பதுபோல, இஹலோக புருஷார்த்த ஸாதனங்களிலேயே ஊற்றமடைய பிராகிருதர்களையும் இழுத்துப் பிடிக்க வேண்டி இங்ஙனே யருளிச் செய்கிறாரெனக் கொள்க.

அடிவரவு :- நந்தா முதலை கொலை சிறை இழை பண் துளை விடை வண்டார்சலம்.

 

English Translation

This garland of Tamil songs on the Lord of bee-humming groves-surrounded beautiful Nangur’s Manimadakkoyil is sung by the Lord’s ever faithful devotee, the lasting-fame-fertile-Mangai King Kaliyan. Those who master it will rule the ocean-girdled Earth as kings under sky-touching moon-white parasols and rejoice.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top