(1228)

(1228)

சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,

நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான் நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,

சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,

வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

 

பதவுரை

சலம்கொண்ட இரணியனது அகல் மார்வம்

தப்பு எண்ணங்கொண்ட ஹிரண்யாஸுரனுடைய அகன்ற மார்வைப் பிளந்தொழித்தவனுயும் பெரிய கடலைக் கடைந்து

தடகடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை

பெரிய கடலை கடைந்து (அதில் தோன்றிய) அமுதத்தை (தேவர்களுக்காக), எடுத்து(க் கொடுத்து திருவள்ள முவந்தனையும் நித்ய யௌவனமுடையனுயும்

நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்;

அழகிய நீலமேகம் போன்ற திருமேனியையுடையவனுயுமிருக்கிற எம்பெருமான்

நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்

எப்போதும் திருவுள்ள மூவந்து போக்கியமாக பொருந்தி வாழுமிடமாய்

சலம் கொண்டு

தண்ணீரைப்பகுதி

மலர்செழியும்

புஷ்பங்களைச் சொரிகின்ற

ஓண் மல்லிகை செருந்தி சண்பகங்கள்

அழகிய மல்லிகைச் செடிககளும் சுரபுன்னை மரங்களும் சண்பக மரங்களும்

மணம் நாறும்

பரிமளம் வீசப் பெற்ற

வண் பொழிலி னூடே

அழகிய சோலைகளினுள்ளே

கயல் ஒடி வலங்கொண்டு விளையாடும் நாங்கூர்

மீன்களானவை ஓடித்துள்ளி விளையாடப்பெற்ற திருநாகூரில்

வைகுந்த விண்ணகரம்

வைகுந்தவிண்ணகரமென்னுக் திருப்பதியை

மட நெஞ்சே ! வணங்கு-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியில் ‘ஷனு’ என்னும் வடசொல் சலமெனத் திரிந்தது. மூன்றாம்மடியில் ஐலமென்பது சலமென்றாயிற்று. இச்சொல்லுக்கு தண்ணீரென்று பொருள் கொள்ளமால் சீற்ற பெரியதிருமொழி – முன்றாம்பத்தி கூதிரு.சலங்கொண்டவிரணியன் மென்று பொருள் கொண்டு, மல்லிகை செருந்தி சண்பகங்கள் ஒன்றோடென்று போரிடுவன போன்று மிகமிக மலர்சொரிகின்றமையைக் கூறுவதாக உரைப்பதுமொக்கும். வித்யார்த்திகள் ஒருவருக்கொருவர் ஸ்பர்த்தையோடு படித்துக் கல்வியில் தேர்ச்சியடைவது போலாம்.

 

English Translation

Then in the yore the Lord tore apart the angry Hiranya’s chest, and churned the deep ocean for ambrosia. Like the benevolent rain cloud, he has a dark hue and resides permanently at Nangur where Kayal fish dance in the water filled groves, which waft the fragrance of Jasmine, Serundi and Senbakam flowers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top