(1209)
பண்டிவ னாயன்நங்காய். படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையொண் கண்மிளிரக் கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும் வயலாலி புகுவர்க்கொலோ.
பதவுரை
|
(அயல் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி சொல்லுகிறாள்) |
||
|
நங்காய் |
– |
பெண்ணே!, |
|
இவன் |
– |
என் மகளைக்கொண்டுபோன விவன் |
|
பண்டு |
– |
முன்பெல்லாம் |
|
படிறன் |
– |
(பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற |
|
ஆயன் |
– |
இடையனாயிருந்தவன் |
|
(அப்படிப்பட்டவிவன் இப்போது) |
||
|
புகுந்து |
– |
(என் வீட்டிலே ப்ரத்யக்ஷமாக) வந்து நுழைந்து |
|
என் மகள்தன் |
– |
என் பெண்ணினுடைய |
|
அம் செம்தொண்டை கனி வாய் |
– |
அழகிய சிவந்த ஆதொண்டைப் பழம் போன்ற அதரத்தை |
|
நுகர்ந்தானை |
– |
(பானம் பண்ணினான்) அப்படி பானம்பண்ணின இவனை |
|
உகந்து |
– |
(என் பெண்) விரும்பி |
|
கொண்டை ஒரு கண் மிளிர |
– |
கொண்டைமீன் போலே அழகிய கண்கள் ஒளிவிட |
|
கிளி போல் மிழற்றி |
– |
கிளிபோலே மழலைச் சொற்கள் பேசிக்கொண்டு |
|
அவன் பின் நடந்து |
– |
அவன் பின்னே நடந்துபோய் |
|
(தம்பதிகளாய்ச் சேர்ந்துகொண்ட அவ்விருவரும்) |
||
|
வண்டு அமர் |
– |
வண்டுகள்படிந்த |
|
கானல்மல்கும் |
– |
கடற்கரைச் சோலை சூழ்ந்த |
|
வயல் |
– |
கழனிகளையுடைய |
|
ஆலி |
– |
திருவாலியிலே |
|
புகுவர் கொலோ |
– |
சென்று சேருவர்களோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மற்றொரு அயல்வீட்டுப் பெண்மணாட்டி ‘அம்மா! கள்வன் கோல்யானறியேனென்று கதறினாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்க, அவளுக்குச் சொல்லுகிறார் தாய். திருவாய்ப்பாட்டிலே “மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழத்துக் காம்புதுகி லவைகீறி, நிச்சலுந் தீமைகள்” செய்து கொண்டிருந்த கேபாலகிருஷ்ணனென்பவன் என்னகத்திலே புகுந்து என் மகளினது கொவ்வைக் கனிபோன்ற அதரத்தைப் பருகிநின்றான், பின்னை அவனுடனே என்மகள் புறப்பட்டுச் சென்றாள், சென்ற இருவரும் திருவாலிக்கேபோய்ச் சேர்ந்திருப்பர்களோ, அன்றி எங்கேனும் விரோதிவர்க்கமுள்ளவிடத்தே புகுந்திருப்பர்களோ அறகின்றிலேன் என்கிறார்.
படிறு – தீம்பு. கெண்டையொண்கண் மிளிர – வழியிலே செல்லும்போது அபூர்வமான பலபல பொருள்களைக் காண நேருமே, அவற்றைக் காணும்போது இவையென்ன இவையென்ன?‘ என்று காதலனைக் கண்ணாலேயே கேட்டுக் கொண்டு போவளாம். அதனைக் கருதியே “கெண்டையொண்கண் மிளிர“ எனப் பட்டதென்க. சில பொருள்களைப் பற்றி வாயாலுங்கேட்க நேருமையாலும் இனிய செஞ்சொற்களைப் பேசிக்கொண்டே வழி நடக்கவேண்டி யிருக்குமாகையாலும் “கிளிபோல்மிழற்றி நடந்து“ எனப்பட்டது.
English Translation
O Ladies! Earlier this fellow was a cattle-stealer. Today he entered and tasted the sweet nectar of my daughter’s red berry lips. With her innocent sparkling eyes made off after him cajoling like a parrot. Would they have entered the bee-humming nectared groves of fertile Tiruvali? O, Alas!
