(1201)
தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே. திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே.
பதவுரை
|
தான் ஆக நினையான் ஏல் |
– |
அவன் தானாகவே என்னே நினையாதிருந்தாலும்; |
|
தன் நினைந்து நைவேற்கு |
– |
அவன் தன்னையே நினைத்துக் கொண்டு மனம் தளர்ந்திருக்கிற என்னை |
|
ஓர்மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய |
– |
மகரத்வஜனான மன்மதன் துன்பப்படுத்த |
|
மெலிவேனா |
– |
இப்படியும் நான் இளைத்துப் போவேனா? |
|
தேன் வாய வரி வண்டே |
– |
தேன்போல் இனிய வாய்ப் பேச்சையும் ரேகையையுமுடைய வண்டே!, |
|
திரு ஆலி நகரி ஆளும் |
– |
திருவாலி நகரியை ஆட்சி புரிகின்ற |
|
ஆன் ஆயற்கு சென்று |
– |
கோபாலகிருஷ்ணன் பக்கலிலே போய் |
|
எனது உறு நோய் |
– |
எனது அதிகமான மனோவியாதியை |
|
அறிய உரையாய் |
– |
தெளிவாகத் தெரிவிக்க வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உடையவன் உடைமையை விட்டுப்பிரிந்தால் ‘ஐயோ! உடைமையை இழந்தோமே!, மறுபடியும் அதனை நாம் பெறவேணுமே!, எப்படி பெறப்போகிறோம்’ என்று துணுக்குத் துணுக்கென்றிருந்து ஸொத்தின்மேலேயே கருக்தான்றியிருக்கவேண்ணடவது முறைமை; இந்த முறைமையை எம் பெருமாள் நோக்குகின்றிலன்; தன் சரக்காகிய என்னைப் பிரிந்து கவலையற்றிருக்கின்றானே; உடையவன் கவலையற்றிருந்தானாகிலும் உடைமை கவலை கொள்வது நியாயமன்று; அசேதநமாயிருந்துவிட்டால் கவலை கொள்ளாமலிருக்கலாம்; சைதந்ய முண்டாகையாலே கவலை கொள்ளாதிருக்கமுடியவில்லை; என்பது முதலடியின் கருத்து. “நாம் அவனைப்போலே யாகமாட்டோமே; நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப்பெற்றிலோம்” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
ஓர்மினாய கொடி நெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ?= அப்பெருமானே நினைக்கிருப்பதே குற்றமாக மன்மதன் என்னை நோவுபடுத்துகின்றானே; நல்லதோ கெட்டதோ எம்பெருமானோலே விளைவதாயிருத்தால் ஸஹிக்கலாம்; இடையிலே மன்மதலொன்னும் சிறுபையல் ஹிம்ஸிக்கும்படியாகவோ நம்முடைய கதி! என வருந்துகின்றாள். “காமற்கு என்கடவேன் கருமாமுகில் வண்ணற்கல்லால், பூமேல் ஜங்கணேகோத்துப் புகுந்தெய்யக் காமற்கு என் கடவேன்” (1948) என்று மேலே அருளிகச்செய்வதுங் காண்க. ஆசை அதிகரித்துக் செல்லுவதையும், அது கைகூடாமையாலே கஷ்டம் மீதார்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு.
English Translation
On his own he doesn’t pine for me, I alone do pine and despair. Is it right to make me thin through the pain of first-emblem Lord? He resides in Tiruvali, Cowherd-Lord and King of the realm. O Honey-tongue bumble bees, tell him of my woeful disease.
