(1200)

(1200)

நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன்

தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே,

சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும்,

கூர்வாய சிறுகுருகே குறிப்பறிந்து கூறாயே.

 

பதவுரை

நீர்வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால்

பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகனா யிருக்கிற ஸர்வேச்வரன்

தன் தார்ஆய நறு துளவம்

தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை

பெரும் தகையேற்கு அருளானே

மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே;

சீர்ஆரும்

சீர்மை பொருந்திய

வளர் பொழில் சூழ்

வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட

திரு ஆலி

திருவாலிமாநகரில்

வயல் வாழும் கூர்வாய சிறு குருகே

கழனியிலே வாழ்கின்ற கூர்மையான வாயலகையுடைய சிறிய கொக்கே!

குறிப்பு அறிந்து

(திருவாலி யெம்பெருனானுடைய) திருவுள்ளக் கருத்தை அறிந்து கொண்டு வந்து (எனக்குச்) சொல்லிவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சோலை வாய்ப்புப் பொருந்திய திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து  வாழ்கின்ற சிறு குருகே, எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்கிற ஸர்வேக்வரனான வயலாகி மணவாளன் தனது திருத்துழாய்மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; (அதாவது-மார்பிலிணிந்துள்ள மணமாலை என்கொங்கைத்தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து ஸம்ச்லேஷிக்கின்ளானில்லை.) அவனுடைய திருவுள்ளம் என்மேல் மாறிவிட்டதோ அறியேன்; நீ சென்று அவனது திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்லவேணும்; நானொருத்தியிருக்கிறேனென்கிற நினைவோடேயிருந்து இவ்விடம் வருவதாக இருக்கிறானா? அல்லது, இத்தலையை மறந்தேயொழிந்தானா? அபிப்ராய மிருக்கும்படியை அறிந்து கொண்டுவந்து எனக்குச் சொல்லாய் என்கிறாள்.

குறிப்பறிந்து கூறாய்=அவனுடைய திருவுள்ளத்தை யறிந்து வந்து என்னிடம் சொல்லு என்ற பொருள்தவிர, மற்றொரு பொருளும் சொல்லலாம்; அதாவது-நான் உனக்குத் தாதுசொல்லும் வார்த்தையை அவனிடஞ்சென்று திடீரென்று சொல்லிவேண்டுமாதலால் அந்தக் குறிப்புத் தெரிந்துகொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்லு என்பதாம்.

இரண்டாமடியில், “பெருந்தகையேற்கு” “பெறுந்தகையேற்கு”  என்பன பாட பேதங்கள். இரண்டு பாடமும் பொருந்தும் பிந்தன பாடத்தில் , திருத்துழாயைப் பெறுவதற்குத் தகுதியுடையளான எனக்கு அருள் செய்கின்றானில்லையே என்று பொருள் கொள்க.

 

English Translation

Water, Sky, the Earth, Fire and Wind, -being all these, he is Lord above all. He denies his Tulasi wreath to my asking-weeping-self. He resides in Tiruvali amid fertile watered groves. O, Pecking-sharp beak-crane, learn what he intends for me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top